சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாக்யராஜ்ஜை விடுங்க.. எடப்பாடி தந்த மேலிட "மெசேஜ்".. தலைக்கு மேல "கத்திகள்".. சிலிர்த்தெழும் ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசிக்கல்கள் கூடிவிட்டதாகவே கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய செயல்பாடுகளை எல்லாம் பார்த்து பாஜக மேலிடம் அதிர்ந்து போய்கிடக்கிறதாம்.. என்ன காரணம்?

அதிமுக விவகாரம், இன்னமும் அதே பரபரப்பு அடங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட சிக்கல்கள் கூடிவிட்ட நிலையிலும்கூட, ஒற்றை தலைமை விவகாரத்தை விட்டுத்தராமல் உள்ளார்.

நேற்றுமுன்தினம்கூட, அதிமுகவில் ஒற்றை தலைமை வழக்கு விசாரணைக்கு வந்தது.. இரு தரப்பிலுமே காட்டமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எடப்பாடி அதிரடி.. திண்டிவனத்தில் சி.வி. சண்முகம்.. திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம்.. ஏன்?எடப்பாடி அதிரடி.. திண்டிவனத்தில் சி.வி. சண்முகம்.. திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம்.. ஏன்?

 குளறுபடி 1

குளறுபடி 1

முக்கியமாக, "ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும், இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இனிமேலும், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.. சட்டசிக்கலில் எடப்பாடி சிக்க உள்ளதால், எப்படியும் ஓபிஎஸ்ஸை அரவணைத்தே செல்லக்கூடும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 குளறுபடி 2

குளறுபடி 2

ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தில் உறுதியாக உள்ளார்.. இது ரத்தத்தின் ரத்தங்களுக்கு மட்டுமல்லாமல், மேலிட பாஜகவுக்கே கொஞ்சம் ஷாக் தானாம்.. ஓபிஎஸ்ஸை, எடப்பாடி பழனிசாமி அரவணைத்து செல்லாமல் இருக்கிறார் என்பதே, பாஜகவுக்கு எதிரான செயலாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஏற்கனவே, சசிகலா, தினகரன் இருவரையும் சேர்த்து கொள்ள எத்தனையோ முறை டெல்லி வலியுறுத்தியும், அதற்கு எடப்பாடி செவிசாய்க்கவில்லை.. இதுவே பாஜகவுக்கு அதிர்ச்சிதான்.. இப்போது ஓபிஎஸ் எதிர்ப்பது என்பதும், பாஜகவை மறைமுகமாக எதிர்ப்பதாகவ கருதப்படுகிறது.. அந்தவகையில், இன்னொரு ஷாக் மெசேஜ்ஜை எடப்பாடி டெல்லிக்கு தந்துள்ளார்.

 திருமாவளவன்

திருமாவளவன்

ஏற்கனவே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின், விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி மீதான கோபம் மக்களிடம் கூடி வருகிறது.. இதுபோக, "ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கும், அப்போதைய அதிமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று திருமாவளவன் முக்கிய கேள்வியை எழுப்பி வருகிறார்.. அன்று என்ன நடந்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும்.. அதனால், விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் அமமுகவின் டிடிவி தினகரனும் இன்னெரு பக்கம் கேட்டுக் கொண்டு வருகிறார்.. இப்படி நாலாபக்கமிரந்தும் எடப்பாடியை நோக்கி நெருக்கடிகள் விழுந்துக் கொண்டிருக்கின்றன.

 குளறுபடி 3

குளறுபடி 3

இதற்கு நடுவில், ரெய்டுகள், விசாரணைகள் என எடப்பாடிக்கு விழிபிதுங்கி வருகிறது.. மற்றொரு பக்கம் கொடநாடு விவகாரம், 4800 கோடி ரூபாய் சம்மந்திக்கு கொடுக்கப்பட்ட வழக்கு என அவ்வளவும் எடப்பாடியை துரத்த ஆரம்பித்துவிட்டது.. தன்னை சுற்றி இத்தனை நெருக்கடிகள் இருந்தும், பொதுக்குழு தொடர்பான சட்டசிக்கல்கள் இருந்தும், ஓபிஎஸ்ஸின் தரப்பில் குடைச்சல்கள் இருந்தும், டெல்லியின் பாராமுகம் இருந்தும், கோர்ட் உத்தரவுகளில் அடுத்தடுத்த பின்னடைவுகள் இருந்தும், எடப்பாடி தன் பிடிவாதத்தில் கெத்தாக நிற்கிறார்.. எனினும், அவருக்கு இனி கடினமான தருணம்தான் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரித்து வருகிறார்கள்..

 பாக்யராஜ்

பாக்யராஜ்

அதிமுகவின் நலனுக்காக அவர், ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற அக்கறை குரல்களும் ஆங்காங்கே எழுகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரை சமாதானப்படுத்த டைரக்டர் பாக்யராஜ் தூது போக போகிறார்.. எடப்பாடி பழனிசாமி என்னதான் செய்ய போகிறார்? என்ன முடிவுதான் எடுக்க போகிறார்? என்று தெரியவில்லை.. கடைசியாக, மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு மட்டுமே நம்பிக்கை அளிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாராம்.. கிட்டத்தட்ட அதிமுக, ஓபிஎஸ் பக்கம் சென்றுவிட்ட நிலையில், பாஜகவுக்கு ஷாக் மெசேஜ் தந்துவிட்டு, கடந்த சில தினங்களாகவே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி..!

English summary
4800 Crore: Are the Thoothukudi fire inquiry reports turning against Edapadi Palanisamy and what will OPS do the next எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசிக்கல்கள் கூடிவிட்டதாகவே கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X