சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பார்ட்டியில் வந்த பழக்கம்.. துணை நடிகை மீனா வெளியிட்ட திடுக்
சென்னை: சென்னையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டியில் கலந்துகொண்ட போது தான் எனக்கு போதைப்பொருள் கிடைத்ததாக மீனா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தற்போது போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையிலும் கஞ்சா மற்றும் மெத்தபெட்டைமைன் போதைப்பொருள் மற்றும் விலை உயர்ந்த போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் வருகின்றன.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் போதைப்பொருள் கும்பலை வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் நேற்று சென்னை ராயப்பேட்டை அருகே உள்ள பிரபல மால் அருகே போதைப்பொருள் விற்க வந்த சினிமா துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 5 கிராம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருளை விற்க முயற்சி செய்யும் போது கையும், களவுமாக போலீசாரல் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கைது செய்யப்பட்ட மீனா, சினிமா மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் துணை நடிகை மீனாவிடம் போதைப்பொருள் எப்படி உங்களுக்கு கிடைத்தது, யாரிடம் இருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் வருமானம் இல்லாததால் இப்படி போதைப் பொருள் விற்றதாக கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் மீனாவை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் நீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. போலீசார் மீனாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற பார்ட்டியில் கலந்துகொண்ட போது தான் எனக்கு போதைப்பொருள் கிடைத்ததாகவும், அந்த பப்புக்கு சென்ற போது தான் மெத்தபெட்டைமைன் என்ற போதைப்பொருள் கிடைத்தது. அப்போது தான் எனக்கு அந்த பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த போதைப் பொருளை எங்கே வாங்கினார்கள் என்று கேட்டு, அதன் பின்னர் அது வாட்ஸ்அப் குரூப் மூலம் கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டேன்.
அதன்பின்னர் தான் போதைப்பொருள் கும்பலிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாட்ஸ் - அப் குழு மூலமாக பெற்றேன். இதையடுத்து அந்த போதைப்பொருளை தனக்கு தெரிந்தவர்களுக்கு ரூ.3000 அதிகமாக வைத்து விற்பனை செய்தேன் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications