திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 6,800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 6,800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா"வில் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

இதுவரை நடக்காத அளவு பிரம்மாண்டமாக பல்வேறு புத்தொழில் வளர்ச்சி சார்ந்த கருத்தரங்குகளையும், கண்காட்சியையும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, அமைச்சர் என்னிடம் கூறியபோது, இந்த நிகழ்ச்சியை நான் கோவையில நடத்த அவரைக் கேட்டுக் கொண்டேன். ஏன்னென்றால் கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில், சுமார் 450 அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு, அதைப் பார்வையிட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் வர இருக்கிறார்கள்.அதேபோல், புத்தாக்கங்கள், புத்தொழில்கள் மற்றும் முதலீடுகள் பற்றி நடக்க இருக்கிற கருத்தரங்குகள், சந்திப்புகளில் பங்கேற்க, சுமார் 1500 பங்கேற்பாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
புத்தாக்கங்கள் மற்றும் புதுயுகத் தொழில் முனைவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகவும் கொண்டு, நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு "Tamil Nadu Startup and Innovation Mission" உயிர் கொடுக்கப்பட்டு, பல்வேறு செயல்திட்டங்கள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரியும்.
2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்தப் பிறகு எடுத்த முயற்சிகளின் பலனாக, இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.
புத்தாக்க சிந்தனையோடு தொழில் முனைவில் ஈடுபடுகிற, தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு, 'டான்சீட்' எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய்க்கும் மேல், நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, பெரு நகரங்களைத் தாண்டி, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 2022-23ஆம் நிதி ஆண்டு மதுரை, ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில், வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதி ஆண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவிட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.புதுயுகத் தொழில் முனைவில் ஈடுபடுகிற, தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்பதால், தகுதி வாய்ந்த Mentor-களையும், தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக, "Mentor TN" என்ற வழிகாட்டி மென்பொருள் தளத்தையும் தொடங்கியிருக்கிறாம்.
மேலும், முதலீட்டாளர்களையும், புத்தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக, முதலீட்டாளர் இணைப்புத் தளம் தொடங்கப்பட்டு, அதன் வழியாக, பல முதலீட்டாளர் - தொழில் முனைவோர் இணைப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.துணிகர முதலீடுகளை ஈர்ப்பதில், கடந்த ஜூலை மாதத் தரவுகள் அடிப்படையில், இந்திய நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் இருக்கிறது. மந்தமான முதலீட்டுச் சூழலிலும் சென்னை சார்ந்த நிறுவனங்கள் மேல் முதலீட்டாளர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை இது காட்டுகிறது.
இந்த நம்பிக்கைக்கு காரணம், தமிழ்நாட்டு மக்கள் நம் மேல் நம்பிக்கை வைத்து வழங்கிய ஆட்சி அதிகாரம்தான். அதிகாரத்தை வானளாவியதாக நான் எப்போதும் கருதுவதில்லை. திருக்குறளில் இருக்கிற அதிகாரங்கள் போல் நெறிப்படுத்தி வழிகாட்டுவதாகத்தான் கருதுகிறேன்.
மக்கள் நம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்ற தான் அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன்.
புத்தொழில் முனைவோர்களுக்கு, உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு, உலக வர்த்தக மையமாக மாறிவரும் துபாயில், ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகுதான், ஒன்றிய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா' அமைப்பு வழங்குகிற லீடர்' அங்கீகாரம், தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து இருப்பது, நம்முடைய அரசின் பல செயல்திட்டங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டை புத்தொழில் நிறுவனங்களுக்கேற்ற மாநிலமாக மாற்றி, உலகின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று சொல்லி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications