Vijay: "மா-னா", ஸ்டாலின் அங்கிள்! பக்குவமில்லாமல் பேசிய விஜய்! சினிமா ஸ்டைலில் பஞ்ச் மட்டுமே! ஆழமில்லா உரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மீது அட்டாக், ஸ்டாலின் மீது அங்கிள் என்று கிண்டல் விமர்சனம், எம்ஜிஆர், இஸ்லாமியர்கள், விஜயகாந்த் பற்றி பேச்சு, மோடி மீது அட்டாக் என்று தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாட்டில் விஜய் பேசி உள்ளார். முறையாக திட்டமிட்டு, பல விஷயங்களை கவர் செய்யும் விதமாக கிண்டலாக பேசி இருந்தாலும் அவரின் பேச்சில் ஆழம் குறைவாகவே இருந்தது. மேலும் என்ன "மா-னாவுக்கு" என்று பேசி, கூடியிருந்த பெண்களை முகம் சுழிக்கவும் வைத்தார்.

எம்ஜிஆர், விஜயகாந்த் ரசிகர்களை கவர வேண்டும் என்று அவர்களை கொஞ்சம் தொட்டு பேசுவது.. அப்படியே இஸ்லாமியர்களை பற்றி இரண்டு வரி பேசுவது.. திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் ஸ்டாலினை அங்கிள் என்று பேசுவது என்று விஜய் கிண்டலாக பல விஷயங்களை பேசி உள்ளார். ஆனால் அவரின் பேச்சில் ஆழம்தான் இல்லை.

Vijay TVK Maanadu Speech:

இன்று விஜய் தனது பேச்சில் முக்கியமான பல விஷயங்களை மிஸ் செய்துள்ளார். சில விஷயங்களை ஆழமாக பேசாமல் விட்டுள்ளார்.

1. துப்புரவு பணியாளர்கள் போராட்டம் பற்றி பேசி இருக்கலாம். அதை பேசாமல் அங்கிள், சித்தப்பா என்று காமெடி செய்கிறார்.

2. அவர் அங்கிள் என்று கூறியதே அரசியல் நாகரீகமற்ற பேச்சுதான். என்னதான் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தாலும் ஸ்டாலினோ, கருணாநிதியோ அம்மா என்பதை கிண்டல் செய்து ஆன்டி என்று கூறியது இல்லை.. அம்மையார் என்று கூட கூறுவார்கள் ஒழிய.. அசிங்கமான பர்சனல் அட்டாக் செய்தது இல்லை.

3. தமிழக அரசியலில் ராம்குமார் மரணம், கவின் மரணம் தொடங்கி பல முக்கிய விஷயங்கள் நடந்துவிட்டன. அதை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.

4. சரி வாக்காளர் முறைகேடு பற்றி.. vote chori விவகாரம் பற்றி விஜய் பேசி இருப்பார் என்று பார்த்தால் அதை பேசவில்லை.

5. அதிமுகவை அட்டாக் செய்த போதும் கூட விஜய் அதை ஆழமாக செய்யவில்லை. சரி ரைமிங், டைமிங்காக.. சுறா படம் போல பேசுகிறார் என்றால்.. அதையாவது விவரமாக பேசியிருந்தால் திமுக, அதிமுக ஓட்டாவது விஜய்க்கு ஷிப்டாக வாய்ப்பு இருந்தது. அதுவும் இங்கே இல்லை.

6. பாயசம் - பாசிசம் என்பது .. அங்கிள் என்று கிண்டல் செய்வது.. என்ன "மா"னாக்கு பேசினேன்.. மைண்ட்வாய்ஸ்.. ராங்க் ப்ரோ என்று பேசுவது.. இப்படி கிண்டலாக ஆழமின்றி பேசுவதே அரசியல் என்று விஜய் நினைக்கிறார் போல. மேலும் நான் என்ன மா-னாவுக்கு அரசியலுக்கு வந்தேன்னுதானே யோசிக்கிறீங்க என்று போகிற போக்கில் பேசி "அரங்கத்தை அதிர வைத்துவிட்டார்."

1. சிங்கம் பற்றி Vijay சொன்ன விஷயம்

விஜய் தனது பேச்சில், சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத்தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா. அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது.

6 Major points from Vijay in the Tamilaga Vetri Kazhaga Manadu at Madurai

2. விஜயகாந்த் பற்றி விஜய் பேச்சு

என்னுடைய அண்ணன் புரட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா. தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்.

3. ரஜினி மீது ரகசிய அட்டாக்

நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள், இப்போ பாருங்க, என் கூட இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள், நான் வந்துவிட்டேன். அவர் வரவில்லை அதனால் நீங்கள் வர மாட்டீர்கள் என்றார்கள்.. இதோ வந்துவிட்டேன்.

4. பாஜக - திமுக மீது அட்டாக்

எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், ஒரே அரசியல் எதிரி திமுகதான், மாற்றமே இல்லை. டீலிங் போட்டு, கூட்டணி வச்சு அரசியல் செய்யும் கட்சி நாங்கள் இல்லை. நாங்கள் ஒன்று உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜக உடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை. தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். 2026ல் தவெக - திமுக இடையில்தான் போட்டியே, வேறு போட்டியே இங்கே இல்லை.

5. மோடிக்கு விஜய் கேள்வி

கூட்டணி வைக்கலாம்.. கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா? செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே? மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ? என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?" தவெக தலைவர் விஜய்

6. ஸ்டாலின் அங்கிள் - விஜய் அட்டாக்

நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா? நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே - மக்களை ஏமாற்றியது போதும். எம்ஜிஆர் இருக்கிற வரை யாராலும் முதல்வர் ஆக முடியவில்லை.. அப்படிப்பட்ட தலைவர் அவர்.

வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் , ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங்க் அங்கிள். மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்

7. விஜய் போட்டியிடும் தொகுதி எது?

மதுரை கிழக்கில் விஜய் போட்டி என்றதும் ஆரவாரித்த தொண்டர்கள். கடைசியில் எல்லா தொகுதியில் விஜய்தான் போட்டி, அப்படி நினைத்து வாக்களியுங்கள் என்று விஜய் விளக்கம் அளித்தார். 234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல. நான் ஒன்றும் மார்க்கெட் போன பின், அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன். எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்

மக்கள் நீங்கதான் ராஜா.. நீங்க தேர்வு செய்ய போகும் அந்த தளபதி யார்? என்று விஜய் தனது உரையில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+