மீன் விலை எகிற போகுது! தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று அமலுக்கு வருவதாக அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலம், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தினை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தம் சட்டத்தின் படி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை வங்கக் கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் காலம் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்க இப்படி ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இன்று நள்ளிரவு முதல் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். தமிழகத்தின் குமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையில் தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் மேற்குறிப்பிட்ட 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதுவைக்கும் இந்த தடைக்காலம் பொருந்தும்.
பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் தவிர விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் எதற்காக என்று கேட்டால், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கும் பட்சத்தில், மீன்கள் இனம் அழிந்துவிடும் என்பதனால் இந்த மீன்பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு (15 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் கூறினார். மேலும் கூறுகையில், வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை இந்த மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த மீன்பிடி தடைக்காலத்தின் போது விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 கடல் மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம். இந்த மீன்பிடி தடைக்காலத்தினால் பாதிக்கப்படும் சுமார் 17 ஆயிரம் மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.8,000 நிவாரணமாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தடைக்காலத்தை மீறி மீன்பிடிக்க சென்றால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தம் சட்டம் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களின் வரத்து குறையும். இதனால் மீன்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications