சோறு வேணாம், ஒன்னும் வேணாம்.. விஜயகாந்த் எங்கே? பிரேமலதா சொன்ன வார்த்தை.. "துள்ளிகுதிக்கும்" தேமுதிக
சென்னை: தேமுதிக பொருளாளரும், மூத்த தலைவருமான பிரேமதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைக்கேட்டு தேமுதிகவே திக்குமுக்காடிப்போயுள்ளது.
கடந்த முறை தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளாமல், எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவை பல்வேறு அரசியல் விமர்சகர்களும் விமர்சிக்கவே செய்ததை மறுக்க முடியாது.
என்ன இருந்தாலும், விஜயகாந்த்தை அதிமுக கைவிட்டிருக்க கூடாது என்ற ஆதங்க குரல்கள் இன்னமும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது எம்பி தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வரும்நிலையில், கூட்டணி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதேசமயம், விஜயகாந்த் மீது பாஜக மேலிட தலைவர்களுக்கும் தனி பிரியம் உண்டு என்பதையும் நினைவுகூர வேண்டிஉள்ளது.

முதல்வர் ஸ்டாலின்: தமிழக முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, நண்பர் விஜயகாந்த் மீது அபரிமிதமான பாசத்தை வைத்திருப்பவர்.. கடந்த வருடம், தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் பலர், திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தபோதுகூட, விஜயகாந்த் மனம் புண்படும்படி யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என்று மறைமுகமாக அவர்களது வருகையை தடுத்து நிறுத்தினாராம் ஸ்டாலின்..
அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு ரீதியான விஷயங்கள் இவை என்றாலும், அரசியல் ரீதியாக திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தேமுதிக, தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் போராட்டம் நடத்தியுள்ளது. அந்தவகையில், விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
என்ல்எசி அறிவிப்பு: குறிப்பாக, என்எல்சி நிர்வாகம் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது, கூட்டணிக்காக பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரி பிரச்னை குறித்து பேசாமல் திரும்பியுள்ளார். கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நியாயமான தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் சார்பில் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்.
வரும் லோாக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். மேலும் அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி தொண்டர்களை சந்திப்பார்" என்று பிரேமலதா.
வறுமை ஒழிப்பு தினம்: வழக்கமாக தனக்கு பிறந்தநாள் என்றால், அதை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது விஜயகாந்த்தின் வழக்கம்.. அரசியலுக்கு வருவதற்கு முன்பேயே, கண்ணுக்கு தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு வாழ்வும், சோறும் போட்டவர்.. அரசியலுக்கு வந்தபிறகு, தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார். இந்த நாளில், கூடுதல் நலத்திட்டங்களை வழங்குவது விஜயகாந்த்தின் இயல்பு..

அதன்படி, கடந்த வருட பிறந்தநாளில்கூட, தொண்டர்கள் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க காலையிலேயே கட்சி ஆபீசில் திரண்டனர். விஜயகாந்தால் யாரிடமும் அப்போது பேச முடியவில்லை என்றாலும், தொண்டர்களின் வாழ்த்தொலியை கேட்டு பூரித்து போனார்.. உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினார்.. பிறகு இரு கைகளையும் கூப்பி கூட்டத்தினருக்கு வணக்கம் சொன்னார்..
எகிறும் ஆவல்: அலுவலக வாயிலில் கூடியிருந்த தேமுதிக மகளிரணியினர், "தெய்வ தரிசனத்துக்காக எப்படி மக்கள் வரிசையில் காத்திருப்பார்களோ, அப்படி காத்து கொண்டிருக்கிறோம்.. எங்க ஆயுசைகூட அவருக்காக தந்துடறோம்.. 200 வருஷம் கேப்டன் வாழ வேண்டும்.. எங்களுக்கு சாப்பாடு வேணாம், ஒன்னும் வேணாம்... எங்க கேப்டனை, ஒரு நாளைக்கு ஒருமுறை எங்க கண்ணில் காட்டினால் போதும்.. மக்களே, மக்களே என்று அவர் கூப்பிடும் அந்த வார்த்தைக்காக ஏங்கி கிடக்கிறோம்" என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.
இதோ, ஆகஸ்ட் 25ம்தேதி விஜயகாந்த் பிறந்தநாள் வரப்போகிறது.. இந்த முறையும் கோயம்பேடு ஆபீசுக்கு வந்துதொண்டர்களை சந்திக்க போவதாக பிரேமலதா அறிவித்துள்ளதால், தேமுதிக வட்டாரமே குதூகலமாகி உள்ளது. கேப்டனை சந்திக்க தயாராகி வருகிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications