50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கனவு.. கைவிரித்த அரசு.. சம்பளத்தில் 15% வரை வித்தியாசம் ஏற்படும்
சென்னை: கிட்டத்தட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்கும் 8-வது ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக இருக்கிறார். தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 7% முதல் 15% வரை வித்தியாசம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பு, ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பிற சேவை நிலைமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து, அதில் தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மத்திய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்தப்படும் ஆய்வுக்குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமாக செயல்படுத்தப்படுகிறது.

50 லட்சம் அரசு ஊழியர்களின் விருப்பம்
இதன்படி 2026ம் ஆண்டு அமல்படுத்தப்பட வேண்டும். இதற்காக கிட்டத்தட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்கும் 8-வது ஊதியக்குழுவின் குறிப்பு விதிமுறைகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக இருக்கிறார். 8-வது ஊதியக்குழு 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இது வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
ஊதியத்துடன் அகவிலைப்படி இணைப்பு இல்லை
இந்தநிலையில் சமீப நாட்களாக பல ஊழியர் சங்கங்கள், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 8-வது ஊதியக்குழு சம்பளம் 2027-ம் ஆண்டுக்கு பிறகே எதிர்பார்க்கப்படுவதால், அடிப்படை ஊதிய இணைப்பை முன்கூட்டியே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிக்னறன. இப்படி செய்தால்
இது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும். மேலும் எதிர்கால அகவிலைப்படிகள் திருத்தப்பட்ட தொகையில் கணக்கிடப்படும் என்பதால் அரசு ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
மத்திய அமைச்சர் விளக்கம்
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அடிப்படை ஊதியத்துடன் தற்போதைய அகவிலைப்படியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "தற்போதுள்ள அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது தொடர்பான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் தற்போது இல்லை" என்று தெரிவித்தார்.
ஊதியம் குறையும்
அரசின் முடிவு காரணமாக இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 7% முதல் 15% வரை வித்தியாசம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக, புதிய ஊதியக் குழு வரும்போது, அப்போதுள்ள அகவிலைப்படி (உதாரணமாக, 50% அல்லது அதற்கும் மேல்) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும். இதன் மூலம் புதிய அடிப்படை ஊதியம் உயரும். இந்த இணைப்பு இப்போது நடைபெறாததால், 8-வது ஊதியக் குழுவின் கீழ் நிர்ணயிக்கப்படும் புதிய அடிப்படை ஊதியம் குறைவாக கிடைக்கும்.
சம்பளம் வித்தியாசம் ஏற்படும்
ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் பயன்படுத்தப்படும் பொருத்துதல் காரணி தற்போதைய அடிப்படை ஊதியத்தின் மீது தான் கணக்கிடப்படும். அகவிலைப்படி இணைக்கப்படாமல் இருப்பதால், ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒட்டுமொத்த சம்பள உயர்வு குறைவாக இருக்கும். நிபுணர்களின் கருத்துப்படி, இணைப்பு இல்லாததால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த சம்பளத்தில் 7% முதல் 15% வரை வித்தியாசம் ஏற்படலாம்.வீட்டு வாடகைப்படி , பயணப்படி போன்ற பல அலவன்ஸ்கள் அடிப்படை ஊதியத்தின் சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. அகவிலைப்படி இணைக்கப்படாமல் இருப்பதால் அடிப்படை ஊதியம் குறைவாகவே இருக்கும். இதனால், அடிப்படை ஊதியத்தின் சதவீதமாகக் கணக்கிடப்படும் மற்ற படிகளின் தொகையும் குறைவாகவே கிடைக்கும்.
ஓய்வூதியம் குறையும்
அதேபோல் ஓய்வூதியம் , கிராஜூவிட்டி போன்ற ஓய்வுகாலப் பலன்கள் ஒரு ஊழியரின் இறுதி அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் தான் கணக்கிடப்படும். எனவே அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படாததால், ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டி தொகையும் குறைவாகவே இருக்கும்.
அரசு ஊழியர்கள் வாதம்
பொதுவாகவே அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்ய வழங்கப்படும். அரசு ஊழியர் சங்கங்கள், கடந்த 30 ஆண்டுகளில் அகவிலைப்படி உயர்வு உண்மையான பணவீக்கத்திற்கு ஈடு கொடுக்கவில்லை என்றும், எனவே உடனடியாக இணைக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறார்கள். ஆனால் அதற்கு மத்திய அரசு சம்மதித்ததே இல்லை
என்ன நன்மை
ஒருவேளை அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தால் ஊழியர்களுக்கு உடனடியாக ரொக்கப் பலன் இருக்காது என்றாலும், நீண்ட காலத்தில் பெரும் நன்மைகள் கிடைக்கும். புதிய அடிப்படை ஊதியம் உயர்வதால், எதிர்காலத்தில் கிடைக்கும் சம்பள உயர்வுகள் அதிகரிக்கும். வீட்டு வாடகைப்படி போன்ற படிகள் உயர்வதால், மொத்தச் சம்பளம் அதிகரிக்கும். ஓய்வூதியப் பலன்களின் அடிப்படை உயர்வதால், ஓய்வுகாலத் தொகை கணிசமாக அதிகரிக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications