துணிகரம்.. சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை.. வைரம், தங்கத்தை அள்ளி சென்றது எப்படி?
சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் ஷட்டரை வெட்டி எடுத்து 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஜூவல்லரியில் மர்மநபர்கள் தங்கம், வைரம் என மொத்தம் 9 கிலோ நகைககைளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசிடம் இருந்து தப்பிக்க இந்த கும்பல் சிசிடிவி கேமரா, ஹார்ட்டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளது. இதுதொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஸ்ரீதர்(36). இவருக்கு அங்கு 2 மாடிகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதில் 2வது தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் முதல் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு ஸ்ரீதர் தனது நகைக்கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஷட்டரில் பெரிய ஓட்டை
அதாவது நகைக்கடையின் முன்பக்க ஷட்டரில் ஒரு ஆள் உள்ளே சென்று வருவதற்கு வசதியாக பெரிய ஓட்டை போடப்பட்டு இருந்தது. வெல்டிங் மெஷின் அல்லது கியாஸ் கட்டர் கொண்டு மர்மகும்பல் கொள்ளையடிப்பதற்காக ஷட்டரில் ஓட்டை போட்டது தெரியவந்தது. இதனால் பதறிப்போன ஸ்ரீதர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடைக்குள் அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன.

9 கிலோ கொள்ளை
லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து தங்கம், வைர நகைகளை மர்மகும்பல் அள்ளிச்சென்றது தெரியவந்தது. அதோடு கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது. இந்த கும்பல் மொத்தம் 9 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சிசிடிவி ஆய்வு
சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?
இதுபற்றி சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு கூறுகையில், ‛‛ஷட்டர், லாக்கரை கட் செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை பார்த்து விசாரித்து வருகின்றனர். இப்போது தான் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உள்ளார். அவரிடமும், கடையில் பணி செய்யும் ஊழியர்களின் விபரங்களும் பெற்று அவர்களிடமும் விசாரை நடத்தப்படும். குற்றத்தில் ஈடுபட்டவரை விரைவில் கைது செய்து விடுவோம்'' என்றார்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications