எடப்பாடி இருக்காரே.. மைக்கை பிடுங்கிய பாஜக தலை.. ஏய் என்ன பேசிக்கிட்டு இருக்க.. திரும்பிய அதிமுக

கடந்த சில நாட்களாக அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் பாஜக நிர்வாகி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் குறித்து வன்முறையை உருவாக்கும் விதமாக பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் சில பொய்யான வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோக்கள் பொய்யானது ஆகும்.

பொய்யான வீடியோக்கள்

பொய்யான வீடியோக்கள்

இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். இதில் பிரசாந்த் உமாராவை கைது செய்ய 20ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் வதந்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு பொய்யாக அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றால் அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு உள்ளது.

போராட்டம்

போராட்டம்

இந்த வழக்கை எதிர்த்து பாஜக சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கரு நாகராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். பெரிய அளவில் தொண்டர்கள் இல்லாமலே கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக அங்கே அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆனந்த்

விஜய் ஆனந்த்

இந்த நிகழ்வில் பேசிய பாஜக சென்னை மத்திய மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், தமிழ்நாட்டில் பாஜக நன்றாக செயல்படுகிறது. அண்ணாமலைதான் எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படுகிறார். எடப்பாடி எதிர்க்கட்சி தலைவர் போல இல்லை. அவருக்கு திறமை இல்லை. அவர் திறனற்ற தலைவராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு அரசியல் திறமை, திராணி இல்லை என்று கூறினார். திமுகவிற்கு எதிரான கூட்டத்தில் இவர் அதிமுகவை விமர்சனம் செய்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த கரு நாகராஜன் உடனே தலையிட்டு, விஜய் ஆனந்த் மைக்கை பிடுங்கினார். அதிமுக இந்த விவகாரத்தை தற்போது கவனித்து உள்ளது. விஜய் ஆனந்த் பேசும் வீடியோவை பகிர்ந்து அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக வெளியேற தொடங்கி உள்ளனர். பாஜகவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி தற்போது அதிமுகவில் இணைந்து வருகின்றனர். முக்கியமாக ஐடி விங் நிர்வாகிகள் வரிசையாக பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். முதல் ஆளாக பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அவர் அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலையின் தலைமையை மிக கடுமையாக நிர்மல் தாக்கி இருந்தார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

மேலும் அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். இதனால் அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்துள்ளனர். அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார். அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+