பெண் என்றால் நான் அன்றோ..விடை கொடுத்தார் ’பன்முக கலைஞர்’ சிஐடி சகுந்தலா! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
சென்னை: தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற பழம் பெரும் நடிகையான சகுந்தலா என்ற சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ் திரை உலகில் நாடகங்களில் இருந்து வந்து புகழ் பெற்ற நடிகர்கள் காலத்தால் அழியாத தனி இடத்தை பெற்று இருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் சகுந்தலா.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சகுந்தலா சென்னையில் நாடகங்களில் நடிக்க வந்தார். அப்போது பிரபலமாக இருந்த லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்டோர் நடத்தி வந்த நடன நாடகங்களில் நிகழ்ச்சிகள் பாடல்களுக்கு நடனம் ஆட்ய்வது தான் அவரது வழக்கம்.
துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. நாடகங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார் அவர். 1970 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான சிஐடி சங்கர் தான் அவரது முதல் படம் அதற்குப் பிறகு அவர் சிஐடி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.
வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயரும் நடிகர்களைப் போல, ஒரு நடன கலைஞராக அறிமுகமாகி, அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து கதாநாயகியாக உயர்ந்தவர் சிஐடி சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் நடித்த தில்லானா மோகனாம்பாள், பாரதவிலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்கள் காலத்தால் அழியாதவை.
அது மட்டுமல்லாமல் படிக்காத மேதை, திருடன், தவப் புதல்வன், ராஜராஜ சோழன், என் அண்ணன், இதயவீணை உள்ளிட்ட பல படங்களை நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் சிஐடி சகுந்தலா.
தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு உடல் நலக் குறைவால் பெங்களூரு சென்ற அவர் தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று ( செப்டம்பர் 17ஆம் தேதி) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பழம் பெரும் நடிகையான சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications