"அயர்ன் லேடி".. மோடியை பாதுகாத்த தமிழ் பெண்.. SPGயில் பணியாற்றியவருக்கு இப்படி ஒரு நிலையா? கலக்கம்!
சென்னை: எஸ்பிஜி படையினரால் அயர்ன் லேடி என்று புகழப்பட்ட.. பிரதமர் மோடியின் தனி பாதுகாப்பு படையில் கெத்தாக வலம் வந்த தமிழ் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த படையில் இருந்து வெளியேறி இருப்பது பலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் படையின் 10வது பட்டாலியனில் தலைமை கான்ஸ்டபிளாக இருக்கிறார் வி ஷாலினி. 36 வயதாகும் இவரின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் ஒரு லத்தி! தினமும் காலையில் ரோல் கால் செய்யும் போதெல்லாம் கிரவுண்டில் வந்து லத்தியுடன் சல்யூட் அடிப்பதுதான் இவரின் வேலை.
ஆனால் இப்போது லத்தியை வைத்துக்கொண்டு.. சாந்தமாக சுற்றும் ஷாலினிக்கு என்று வேறு ஒரு முகம் இருந்தது. அதிரடி படங்களில் காட்டப்படுவது போல ஒரு சூப்பர் ஹீரோ முகம் இருந்தது.. மொத்த எஸ்பிஜி படையும் அயர்ன் லேடி என்று அந்த முகத்தை அழைத்து வந்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவுதான் எஸ்பிஜி.. அதாவது ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப். பிரதமரை சுற்றி கருப்பு உடையிலும், சபாரி உடையிலும் இருக்கும் வீரரக்ள்தான் எஸ்பிஜி. அதில் பிரதமருக்கு மிக நெருக்கமாக இருக்கும் 4-5 வீரர்கள் எஸ்பிஜியின் உட்பிரிவான் சிபிடி பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது close protection team (CPT) குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் பிரதமர் மோடியின் தனி பாதுகாப்பிற்கு இவர்கள்தான் காரணம். P-90 sub-machine துப்பாக்கிகள், ஏகே 47, கையில் தனியாக பிஸ்டல் என்று வலம் வருபவர்கள்.

சிபிடி
இந்த அதிகாரிகளுக்கு மிக தீவிரமாக கடினமான பயிற்சிகள் வழங்கப்படும். இவர்களை தேர்வு செய்வதே மிக கடினமான முறைகள் மூலம் செய்யப்படும். பிரதமர் எங்கே சென்றாலும் அங்கே செல்வது. அவருக்கு முன்பாக சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பை உறுதி செய்வது. பிரதமர் செல்லும் வழியில் பாதுகாப்பை உறுதி செய்வது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது, சந்தேகமான ஆட்களை முன்பே பிடிப்பது, பிரதமரை சுற்றி 360 டிகிரியில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது என்று அனைத்து பணிகளையும் இந்த 9 பெண் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவர்கள் துல்லியமாக துப்பாக்கியால் சுடும் திறன் கொண்டவர்கள், வேகமாக ஓடும் திறன் கொண்டவர்கள். அதேபோல் எந்த நேரத்திலும் டென்சன் ஆகாத எமோஷனல் இன்டலிஜென்ஸ் பயிற்சி பெற்றவர்கள்.

எஸ்பிஜி
இந்த குழுவில் சேருவது எல்லாம் மிகவும் கடினம். தமிழ்நாட்டில் கான்ஸ்டபிளாக இருந்து அதன்பின் எஸ்பிஜியில் சேர்ந்தவர்தான் வி ஷாலினி. தமிழ்நாட்டில் இருந்து இந்த குழுவில் சேர்ந்த முதல் பெண் போலீஸ் இவர்தான். வறுமை காரணமாக போலீஸ் வேளையில் சேர்ந்த இவர் 2005ல் இருந்து கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். வேலைக்கு இடையில் தொலைதூர கல்வியில் கணிதம் படித்த இவர் 2008ல் போலீஸ் பயிற்சி கல்லூரியில் கணினி பணியாளராக இருந்தார். அதன்பின் அங்கேயே பரேட் பயிற்சியாளராகவும் இருந்தார். இவர் ஒருநாள் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போது அங்கே மைதானத்தில் பயிற்சி எடுத்திக்கொண்டு இருந்த எஸ்பிஜி அதிகாரிகள் இவரை பார்த்து வியந்து உள்ளனர்.

ஷாலினி
இவரின் பயிற்சியை பார்த்து அசந்து போன அவர்கள்.. அவரை அழைத்து எஸ்பிஜிக்கு பயிற்சி எடுக்கும்படி கூறி உள்ளனர். இதனால் உந்தப்பட்ட ஷாலினி அதற்கான பயிற்சிகளை தொடங்கி உள்ளார். பின்னர் தேர்வுகளையும் தொடர்ந்து எழுதி வந்தவர் 2013ல் எஸ்பிஜி குழுவிற்கு தேர்வானார். 2013ல் இதற்காக நேர்முக தேர்வு, சோதனைகளுக்கு டெல்லி சென்றவர், அங்கும் தேர்வாகி பின்னர் 2 வருடம் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் நடந்த தேர்வில் மீண்டும் வென்று கடைசியில் 2014 இறுதியில் எஸ்பிஜி குழுவில் இணைந்தார். இதையடுத்து எஸ்பிஜி குழுவில் சோனியா காந்தியின் பாதுகாப்பிற்காக பணியில் இருந்தவரிடம் பிரதமர் மோடியின் சிபிடி குழுவில் இணைகிறீர்களா என்ற ஆபர் வந்துள்ளது. இதற்காக 5 மாதம் தீவிர பயிற்சிகளை செய்துள்ளார்.

பயிற்சி
35 ஆண்களுக்கு இடையில் ஒரு பெண்ணாக பயிற்சி செய்து, 5 மாதத்தில் சிபிடி குழுவிற்கும் தேர்வானார். இந்த தேர்வின் முடிவில் இவர் பிரதமர் மோடியின் தனி பாதுகாப்பு குழுவில் இணைந்தார். பிரதமர் மோடியை அதன்பின் 2015- 2018 வரை மூன்று ஆண்டுகள் பாதுகாத்த குழுவில் ஐவரும் இடம்பெற்று இருந்தார். அப்போதுதான் ஷாலினியை அங்கு இருந்த சக சிபிடி அதிகாரிகள் அயர்ன் லேடி என்று அழைத்து உள்ளனர். வலிமையான தோற்றம், வேகமான முடிவு, துடிப்பான வேகம் என்று இவரின் செயல்பாடுகள் சிபிடி குழுவில் பெரிதும் கவனிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன செய்கிறார்
ஆனால் 2018ல் இவரின் தாயாரின் உடல்நிலை மோசமாகி உள்ளது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால், வேறு வழியின்றி இவர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இவரை சீனியர் சிபிடி அதிகாரிகள் போக வேண்டாம் என்றும் சொல்லியும் வேறு வழி இல்லாமல், அந்த பதவியில் இருந்து விலகி மீண்டும் போலீஸ் அதிகாரியாக தமிழ்நாட்டில் தொடருகிறார். பிரதமரை பாதுகாத்து வந்த இவர் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் படையின் 10வது பட்டாலியனில் தலைமை கான்ஸ்டபிளாக இருக்கிறார் வி ஷாலினி. விரைவில் இவருக்கு முக்கிய துறையில் பொறுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து உள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications