பாஜக, அதிமுக திமுகவிற்கு பேராபத்து.. உளவியல் ரீதியாக மக்களை போராட தூண்டுகிறாரா விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க முடியாமல் போனால் பாஜக, அதிமுக திமுகவிற்கு பாதகமாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.. உளவியல் ரீதியாக பலரையும் விஜய் தன் பக்கம் ஏற்கனவே இழுத்துவிட்டார் என்றும், அவரை ஆளவிட்டு, அவரது தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, அவரை பதவியேற்கவிடாமல் செய்வது பாஜக, அதிமுக, திமுகவிற்கு பாதகமாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அத்துடன் விஜய் அமைதியாக இருப்பதும் மக்களிடையே அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறதாம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் . இதில் ஒரு இடத்தில் ராஜினாமா செய்தாக வேண்டும். எனவே 107 இடங்கள் தவெகவிற்கு உள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏ எண்ணிக்கை குறைவாதால் மெஜாரிட்டி எண்ணிக்கையும் 234க்கு பதில் 233 ஆககுறைந்துள்ளது (தற்காலிமாக).

A Grave Threat to the BJP AIADMK and DMK Is Vijay Psychologically Inciting the Public to Protest

இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 73 இடங்களை தேர்தலில் வென்றுள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் இல்லை. இதனிடையே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திடீரென்று விலகி த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததுடன், ஆட்சிக்கு ஆதரவும் கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. நேற்று இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவு கடிதம் தந்துவிட்டார்கள். இதனால் விஜய் தற்போது 116 இடங்களுடன் இருக்கிறார். 117 என்கிற மேஜிக் இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியாத நிலையில் விஜய் இருக்கிறார்.

மறுபக்கம் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் உள்ளன. ஒட்டுமொத்தமாக 105 இடங்கள் வருகிறது. பாமக 4 இடங்கள், அமமுக ஒரு இடம், தேமுதிக ஒரு இடம், விசிக ஒரு இடம் என 116 இருக்கிறது. கிட்டத்தட்ட டை என்கிற நிலையே இருக்கிறது. இன்னும் ஒரு சீட் பாஜகவிடம் உள்ளது. அவர்கள் யார் பக்கம் நிற்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். நிச்சயமாக இருவருக்குமே வாக்களிக்க பாஜக ஒப்புக்கொள்ளாது. எனவே நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் விசிக தவெக உடன் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பு அதிகம் என்கிற நிலை உள்ளது.

ஒருவேளை அது நடக்காமல் போனால் அது விஜய் வருவார் என்று வாக்களித்த மக்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே மூன்று முறை ஆளுநரை சந்தித்து மெஜாரிட்டி இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பியது மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு அலையை உருவாகி வருகிறது. ஏனெனில் திமுக, அதிமுக சேர்ந்து தவெகவை ஆட்சியமைக்க விடமால் சதி செய்வதாகவும், பாஜக அதற்கு துணை போவதாகவும் தவெகவினர் சிம்பதி உருவாக்கி வருகிறார்கள். அது நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி வருகிறது. தற்போதைய நிலையில் தவெகவிற்கு எதிரான ஒவ்வொரு விஷயமும் அந்த கட்சிக்கும் விஜய்க்கும் சாதகமாகிறது. அந்த பணியினை தவெக ஐடி விங்க் செய்தும் வருகிறது.

ஒரு மீம்ஸ் அண்மையில் காண நேர்ந்தது.. போற போக்கை பார்த்தால் விஜய், நீ போராடி ஆட்சியமைத்து எங்களை காப்பாய் என்று பார்த்தால், நாங்கள் உன்னை ஆட்சியில் அமர வைக்க போராட வேண்டியதிருக்கும் போலயே என்று மீம்ஸ் வந்தது. அது கிட்டதட்ட நிஜம் என்பது போல் மாறி வருகிறது. அந்த அளவிற்கு விஜய்கு ஆதரவு அலைகளை பாஜக, அதிமுக, திமுகவின் நடவடிக்கையை வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. உளவியல் ரீதியாக விஜய்க்காக மக்களை களம் இறங்க வைக்கும் அளவிற்கு நிலைமை மாறி வருகிறது. ஒருவேளை ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தாலோ அல்லது ஆட்சி கலைக்கப்பட்டாலே விஜய்க்கு சாதகமாக முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். விஜய்யை ஆளவிட்டு, ஆட்சியில் நடக்கும் தவறு காட்டி அவருக்கு செக் வைக்காமல் இப்படி வேறு வகையில் இறங்குவது பாரம்பரிய கட்சிகளுக்கே ஆபத்தாக முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+