கோட்டையில் தேங்கிக் கிடக்கும் கோப்புக்கள்! அமைச்சர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் ரெஸ்ட்!
அமைச்சர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் ரெஸ்ட்.
சென்னை: கடந்த ஒரு மாதமாக அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்ததால் கோட்டையில் ஏராளமான கோப்புக்கள் தேங்கிக் கிடக்கின்றன.
இதனால் நாளை முதல் அடுத்த ஒரு வார காலத்திற்கு அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் துறை ரீதியான பணிகளில் பரபரப்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக ஈரோட்டில் முகாமிட்டு கடுமையாக தேர்தல் பணியாற்றியதால் இன்று ஒரு நாள் மட்டும் அமைச்சர்களுக்கு ரெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்த அமைச்சர்கள் நேற்று மாலையே அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். கடந்த ஒரு மாதமாக குடும்பத்தை பிரிந்து தேர்தல் பணியாற்றிய அவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் பல அமைச்சர்களுக்கு லோக்கல் கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகியிருப்பதால் ரெஸ்ட் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.

கோப்புகள் தேக்கம்
இதனிடையே அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்ததால் கோட்டையில் ஏராளமான கோப்புக்கள் தேங்கிக் கிடக்கின்றன. பல முக்கியத் துறைகளில் அமைச்சர்களின் கையெழுத்து இல்லாததால் பணிகள் அப்படியே முடங்கி நிற்கின்றன. இதனால் இனி அடுத்த ஒரு வார காலத்துக்கு கோப்புக்களை கிளியர் செய்யும் பணிகளில் அமைச்சர்கள் பிசியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் முத்துசாமி
இதேபோல் வரும் புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் வருவதால் அது தொடர்பான கொண்டாட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளார்கள். மொத்தத்தில் அமைச்சர் ஈரோடு முத்துசாமியை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னைக்கு ஷிப்ட் ஆகிவிடுவார்கள். இடைத்தேர்தல், வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகள் காரணமாக அமைச்சர் முத்துசாமி மட்டும் இன்னும் ஒரு வாரம் கழித்து தனது துறை ரீதியான கோப்புக்களை கவனிப்பார் எனத் தெரிகிறது.

ஜூனியர் சீனியர்
ஈரோட்டில் ஜூனியர் சீனியர் என எந்த பாகுபாடும் இல்லாமல் துரைமுருகன், பிடிஆர், பொன்முடி, ஆகியோரை தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் தினமும் வீதிவீதியாக நடையாய் நடந்து அலைந்து திரிந்து கூட்டணி வேட்பாளருக்காக மிகவும் சின்சியராக ஓட்டுக்கேட்டார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications