வீரியமெடுத்த பூசல்.. ரிசல்ட் வரவே இல்லை! அதுக்குள்ளேயே நாலு திசைக்கு பிரியுறாங்களே! கலங்கும் "கட்சி"
சென்னை; தமிழ்நாட்டில் இருக்கும் கட்சி ஒன்றில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பெரிய கட்சி ஒன்றில் தீவிர உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டு வாரம் முன்பு 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
தமிழ்நாடு வாக்குப்பதிவு: மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் 69.71% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூசல்: தமிழ்நாட்டில் இருக்கும் கட்சி ஒன்றில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பெரிய கட்சி ஒன்றில் தீவிர உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி கட்சியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்று உட்கட்சி ரிப்போர்ட் தெரிவித்துள்ளதால் அந்த கட்சியில் கடும் பூசல் ஏற்பட்டு உள்ளதாம்.
அதன்படி கட்சியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் மொத்தமாக அணிவகுக்க தொடங்கி உள்ளனராம். மூத்த நிர்வாகிகள் பலரும் தலைவரின் தன்னிச்சையான செயல்பாடுதான் காரணம் என்று புகார் வைக்க தொடங்கி உள்ளனராம். அதோடு கட்சியின் செலவுக்காக மேலிடம் கொடுத்த நிதியை தலைவர் தங்களுக்கு கொடுக்கவே இல்லை என்றும் மூத்த நிர்வாகிகள் புகார் வைக்கின்றராம். தேர்தலில் பெரிய நிதி முறைகேடு நடந்து உள்ளது என்று நிர்வாகிகள் புகார் வைக்கின்றனராம்.
அதேபோல் அந்த கட்சி தலைவரும் தனக்கு எதிராக செயல்படும் சீனியர்களுக்கு எதிராக இணையத்தில் செய்திகளை தனது ஐடி விங் ஆட்கள் மூலம் பரப்பிவிட தொடங்கி உள்ளாராம். தன்னை எதிர்க்கும் சீனியர் நிர்வாகிகள் பற்றிய புகார்களை அளிக்க தொடங்கி விட்டாராம்.
இது போக தமிழ்நாட்டை சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவர் லோக்சபா தேர்தல் முடிந்ததும் கட்சி தாவ உள்ளார். தனது மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி பிற மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு வேறு கட்சிக்கு செல்லும் திட்டத்தில் உள்ளாராம். முக்கியமான பொறுப்பில் உள்ள அவர் கட்சியை உடைத்துக்கொண்டு செல்லும் முடிவில் உள்ளாராம்.
இதனால் சில கசப்பான விஷயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் கூட.. மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று இவர் கட்சியை விட்டு செல்லும்.. அல்லது கட்சியை மொத்தமாக உடைக்கும் முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். கட்சி தலைமை மீது அப்செட் காரணமாக அவர் கட்சி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேல்மட்ட நிர்வாகிகளோ அவர் செல்வது ஓகே.. ஆனால் கட்சியை எல்லாம் உடைக்க முடியாது. பல நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு மேல் ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications