Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாயில் ஒரு காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள்.. தண்ணீர் கொட்டி அழித்த "கருப்பு ஆடு".. நாசா ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம், அந்த உயிரினங்கள் மறைய மனிதர்களே காரணமாகி இருக்கலாம் என்று நாசா ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலவு குறித்து ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. நிலவில் பெரிய சுவாரசியம் இருந்தாலும் கூட இன்னொரு பக்கம் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்க அதிக சாதகமான சூழ்நிலை நிலவுவதால் அங்கே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

A scientist says that humans found life on Mars 50 years ago, and then vanished it accidentally

நாசா, இஸ்ரோ, ப்ளூ ஒரிஜின், ஸ்பேஸ் எக்ஸ், சீனா, ரஷ்யா என்று பலரும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது. இதற்கான மார்ஸ் ரோவர்கள், லேண்டர்கள், ஆர்பிட்டர்களை நாசா பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மங்கள்யான் என்ற இந்தியாவின் திட்டமும் கூட இஸ்ரோ மூலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவே அனுப்பப்பட்டது. இந்த கருவிகள் ஒவ்வொன்றும் செவ்வாய் கிரகத்தில் ஒவ்வொரு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

செவ்வாய் வரலாறு: செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாக நம்பப்படுகிறது. அங்கு ஆறுகள், ஏரிகள், குளங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இப்போதும் உள்ளன. ஆனால் அவை எல்லாம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால் அங்கு இருந்த நீர் ஆவியானது எப்படி? தண்ணீர் மாயமானது எப்படி? என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. விஞ்ஞானிகளை இந்த கேள்வி இன்னும் குழப்பிக்கொண்டே இருக்கிறது. இங்கு நீர் ஓடிய தளங்களை நாசாதான் தனது மரினர் 9 மிஷன் மூலம் 1972ல் கண்டுபிடித்தது. இந்த நிலையில்தான் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு குழு இங்கு இருந்த நீர் ஆவியானதற்கு எது காரணமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

முதலில் இங்கு நீர் இருந்த அடையாளங்கள் இன்னும் மறையாமல் இருக்க காரணம், செவ்வாய் கிரகத்தில் டெக்டோனிக் அடுக்குகள் இல்லை. இந்த அடுக்குகள்தான் பூமியில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதனால் நதிகள், ஆறுகள் இருந்த தடயங்கள் சில ஆயிரம் ஆண்டுகளில் மறையும். ஆனால் பூமியில் இருப்பது போல செவ்வாயில் டெக்டோனிக் அடுக்குகள் இல்லை என்பதால் அங்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஆறுகளின் தடங்கள் கூட இப்போதும் கண்கூடாக உள்ளது என்று கூறப்படுகிறது.

செவ்வாய் உயிரினம்: அதேபோல் அங்கே உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அங்கே உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என்ற தியரியும் முன் வைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம், அந்த உயிரினங்கள் மறைய மனிதர்களே காரணமாகி இருக்கலாம் என்று நாசா ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் விரைவில் அவை அழிக்கப்பட்டதாகவும் ஒரு வானியல் பேராசிரியர் கூறியுள்ளார். பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உறுப்பினரான டிர்க் ஷூல்ஸ்-மகுச் இந்த புதிய தியரியை வெளியிட்டுள்ளார், வேற்று கிரக உயிரினங்களை நாம் அதிர்ஷ்டவசமாக கண்டுபிடித்து இருக்காம் , ஆனால் தற்செயலாக அதை அழித்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது அங்கே உயிரினங்களை நாம் கண்டுபிடித்தோம் ஆனால் அதை தவறுதலாக கொன்றுவிட்டோம் என்று கூறியுள்ளார். கியூரியாசிட்டி ரோவருக்கு முன், நாசா 1970களின் நடுப்பகுதியில் வைக்கிங் திட்டத்தை செயல்படுத்தியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இரண்டு லேண்டர்களை அனுப்பியது. இது செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளையும் செய்தது.

இதில்தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி வைக்கிங் சோதனைகளில் ஒன்று மண் தண்ணீரைச் சேர்த்து பின்னர் அந்த மண் செவ்வாய் கிரகத்தில் சேர்க்கப்பட்டது உள்ளடக்கியது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் கதிரியக்க கார்பன் (கார்பன்-14) உட்செலுத்தப்பட்ட நீர் செவ்வாய் மண்ணில் செலுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருந்தால், அவை ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு கதிரியக்க கார்பனை வாயுவாக வெளியிடும். இதை வைத்து அங்கே உயிரினங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும். அதன்படியே ஆரம்ப முடிவுகளில் இந்த கதிரியக்க வாயு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் வந்த ஆய்வுகளில் கார்பன் பெரிதாக கண்டுபிடிக்கப்படவில்லை.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம், அந்த உயிரினங்கள் மறைய கருப்பு ஆடுகளான.. மனிதர்களே காரணமாகி இருக்கலாம் என்று நாசா ஆராய்ச்சியாளர் டிர்க் ஷூல்ஸ்-மகுச் தெரிவித்துள்ளார். அதாவது அங்கே சிறிய அளவிலான மைக்ரோ உயிரினங்கள் இருந்திருக்கலாம். அவற்றில் கூடுதல் நீரை நாமே ஊற்றி தவறுதலாக கொன்று இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாசா செவ்வாய் கிரகத்தில் வைக்கிங் ஆராய்ச்சியின் போது அதிக அளவு தண்ணீரை வெளியேற்றியது. ஆனால் இதுவே தண்ணீருக்கு பழக்கம் இல்லாத செவ்வாய் கிரக மைக்ரோ உயிரினங்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. இதுவே அங்கே உள்ள உயிரினங்கள் மறைய காரணமாகி இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+