சம்பந்தியை வைத்து.. ஆட்டத்தை ஆரம்பித்த புள்ளி! தமிழ்நாட்டில் உருவாகும் புதிய அரசியல் அமைப்பு.. அவரா?
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் முடிவில் இருக்கிறாராம். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 2 வாரம் முன்பு வெளியானது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
கிங் மேக்கர்கள்: 240 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே உள்ளது. என். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் முறையே 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான நபர்களாக உருவெடுத்து 'கிங்மேக்கர்களாக' உள்ளனர். இவர்களின் ஆதரவுடன்தான் மோடி பதவி ஏற்று உள்ளார்.
முக்கியமான பதவிகள்: மத்தியில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் பதவிகள் போன்ற பதவிகள் அதிக முக்கியத்துவம் பெற உள்ளன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் முடிவில் இருக்கிறாராம்.
தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி. யுமான திருநாவுக்கரசு, தமிழ் இலக்கியத்தை மையப்படுத்தி ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். நேரடியாக இந்த அமைப்பில் பங்கு கொள்ளாமல் தனது சம்மந்தி விஜயக்குமார் தலைமையில் இந்த அமைப்பை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் கட்சியின் தலைமை மீதும், கூட்டணிக்கு தலைமையான திமுக மீதும் திருநாவுக்கரசுக்கு அதிருப்தி. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளில் பட்டும் படாமலும் இருந்து வருகிறார் திருநாவுக்கரசு. பத்தாண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கிறது.
எதிர்க் கட்சித் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்கிற நிலையில், ராகுல் காந்திக்கு திருநாவுக்கரசு வாழ்த்து சொல்லவில்லை அந்தளவுக்கு கட்சி மீது அவருக்கு அதிர்ப்தி நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ஒரு இலக்கிய அமைப்பு ஒன்றை உருவாக்கி எதிர்காலத்தில் அதனை அரசியல் மையப்படுத்தலாம் என்பதே அவரது திட்டமாம். அதாவது, இந்த அமைப்பு 2026 தேர்தலை மையப்படுத்தியே காரியத்தில் இறங்குமாம்.
குறிப்பாக, இலக்கிய அமைப்பானாலும் இதன் உள் நோக்கம் என்பது முக்குலத்தோர் சமூதாயத்தினரை ஒருமுகப்படுத்துவதும் அதன் மூலம் அதன் வலிமையை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி 2026 தேர்தலில் தனது முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதும் தான் திருநாவுக்கரசுவின் திட்டம் என்கிறார்கள். 2026-ல் மீண்டும் தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் தருவதற்கு வாய்ப்பில்லை என்றும் கருதுகிறார் திருநாவுக்கரசு. தனக்கு மீண்டும் வாய்ப்பு தராதது போலவே தனது மகனுக்கும் தரப்படாமல் ஓரங்கட்டுவார்கள் என்றே நினைக்கிறார். அதனால், இப்படி ஒரு அமைப்பை உருவாக்கி, தனது வலிமையை உணர்த்தி 2026-ல், தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என காட்டத் திட்டமிடுகிறார்
-
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications