சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை முகப்பேரில் காதல் கணவன் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.. இளம்பெண் தர்ணா

Google Oneindia Tamil News

சென்னை: யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், ஜாதியை காரணம் காட்டி தன்னுடன் வாழ மறுப்பதாக கூறி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    ஜாதியை காரணம் காட்டி உடன் வாழ மறுக்கும் கணவர்.. தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் - வீடியோ

    சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவைச் சேர்ந்தவர் கௌதமி(29). கௌதமியுடன் அவரது தாய், தம்பி தங்கையும் வசித்து வருகின்றனர். பட்டதாரியான கௌதமி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த ஜனவரி மாதம் கௌதமியின் தாய் தம்பி தங்கை சொந்த ஊரான திண்டிவனத்திற்கு சென்றிருந்தார்கள். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தண்ணீர் கேன் சப்ளை செய்யும் விஜய் (29) என்ற இளைஞருடன் கௌதமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி.. பதைபதைக்கும் வீடியோசென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி.. பதைபதைக்கும் வீடியோ

    போலீஸ்

    போலீஸ்

    நாளடைவில் இருவரும் காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாதியை காரணம் காட்டி விஜய் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக கூறி கௌதமி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம்

    புகாரின் பேரில் போலீசார் விஜய் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்தும் விஜய் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கௌதமி நேற்று திருமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    தர்ணா

    தர்ணா

    அவருடன் ஜனநாயக மாதர் சங்க பெண்களும் கலந்து கொண்டனர். திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் உள்ள பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இளம்பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் தொடர்ந்து 2 மணி நேரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    A woman did sit in agitation in Thirumangalam police station citing police not taking action on her complaint.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X