ஆதார் அட்டையை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.. இதை உடனே முடிச்சிடுங்க.. டைம் வேற நெருங்குது
சென்னை: ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன் 11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டும்சரி, ரேஷன் கார்டும்சரி, வெறும் ஆவணங்கள் மட்டுமல்ல.. அது தனிமனித நபரின் அடையாளமும்கூட.. ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பவர்கள் இலவச ரேஷன் பெறலாம். அரசு வழங்கும் இலவச ரேஷன் பொருட்களை மாதந்தோறும் பெறலாம்.
பான்கார்டுகள்: சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

இதற்கு காரணம், ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆதார் கார்டு: அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவுசெய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்..
நீட்டிப்பு: அந்தவகையில், ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன்-11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
myAadhaar மட்டுமே இலவச சேவையை வழங்குகிறது. இருந்தாலும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் செல்ல விரும்பினால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி புதுப்பிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினாலே போதும்:
- https://myaadhaar.uidai.gov.in/-ல் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை அணுகவும்.
- மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு, "உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி எண் வரும்..
- அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்தவுடன் "புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு" என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது மாற்றங்களை செய்ய "முகவரி" விருப்பத்தை பயன்படுத்தவேண்டும். புதிய முகவரிக்கான தகவலையும் பதிவிட வேண்டும். அது இப்போது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
- கட்டணப் பக்கத்தில் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பிறகு, SAVE செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
-பிறகு URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக்கொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications