யாரெல்லாம் ஆதார் கார்டு + பான் கார்டு இணைக்க தேவையில்லை தெரியுமா? "இவங்க மட்டும்" கட்டாயம்.. மேஜர்
சென்னை: பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் என்னாகும் தெரியுமா? யாரெல்லாம் இணைக்க தேவையில்லை தெரியுமா? இதுகுறித்து வருமான வரித்துறை அறிவுறுத்துவது என்ன?
பல்வேறு மோசடிகளை கண்காணிக்கவும், அதை தடுத்து நிறுத்தவும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், தேவையில்லாமல் மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆதார் கார்டு: அதேபோல, நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
எனவேதான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. அந்தவகையில், தொழிலதிபர்கள், மிகப்பெரிய வேலை செய்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்கக்கூடும் என்பதால், பான் கார்டை ஆதாருடன் இவர்கள் இணைப்பது கட்டாயமாகும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அத்துடன் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.. அரசின் நலத்திட்டங்களையும் பெற முடியாது.
விளைவுகள் என்ன: அதுமட்டுமல்ல, புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பெறுவதும் சாத்தியமில்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளியூர் பயணம் செய்ய முடியாது.. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குவது ரூ. 50,000 அனுமதிக்கப்படாது.. ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள். 50,000 எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது.
அதனால்தான், ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.. கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால், எத்தனையோ முறை, இதற்கான காலக்கெடுவைவும் அரசு நீட்டித்து வந்திருக்கிறது.
காலக்கெடு: ஆனால், தற்போது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.. அந்தவகையில், யாரெல்லாம் பான் கார்டுகளை இணைக்கவில்லையோ, அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும்.
அதேசமயம், பான் கார்டு மற்றும் ஆதார் எண்களை ஒருசிலர் மட்டும் இணைக்க தேவையில்லை.. குறிப்பாக, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை இணைக்க தேவையில்லை. அதேபோல, வருமான வரிச்சட்டத்தின்படி, குடியுரிமை இல்லாதவர்கள் அல்லது இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பான் கார்டை இணைக்க வேண்டிய தேவையில்லை.
அவசியமில்லை: அதேபோல, அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் உள்ள தனிநபர் அல்லாதவர்கள் பான் ஆதாரை இணைக்க வேண்டிய தேவையில்லை.. இதற்கு காரணம், அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறப்பு நிபந்தனைகள் காரணமாக, மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதாவது நிறுவனங்கள், அறக்கட்டளைகள் இந்த பான் + ஆதார் அட்டை இணைக்க வேண்டியதில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications