ஆதவ் அர்ஜுனா பேசியது பெரிய சிக்கலாகிடுச்சு.. ஜான் அனுப்பிய புகார்.. கோபத்தின் உச்சிக்கே போன விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் உள்ளே உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது ஆதவ் அர்ஜுனா மீது ஜான் ஆரோக்கியசாமி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு.. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் எங்களை விமர்சனம் செய்யும் விதமாக மோசமாக, அரசியல் செய்யும் விதமாக பேசி உள்ளார்.

விஜய் கடுமையாக பேசினார்
நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம். நாம் அமைதி காத்த நேரத்தில் நம்மை பற்றி அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் அதே தமிழக அரசை உச்ச நீதிமன்றம் நறுக்கு நறுக்கு என்று குட்டி உள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாக வாதம் செய்த அறிவார்த்த வழக்கறிஞர்கள் கூனிக்குறுகி நின்றார்கள். இதை நாடே பார்த்தது.
அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தது ஏன் என்று குட்டு வைத்து.. அதை கலைத்து உள்ளனர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவும் இல்லாமல்.. அரசியல் ஆட்டம் ஆடி வருகிறார். அதிகார மமதையில் ஆடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில்.. உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகளை ஸ்டாலின் எங்களுக்கு விதித்தார்.
மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டது. ஸ்டாலின் சட்டசபையில் சொன்னது எல்லாம் வடிகட்டிய பொய் என்பது தெரிந்துவிட்டது. முதல்வர் சொன்னது எதிலும் உண்மை இல்லை. இது எல்லாம் நடந்தது.. எதற்காக நடந்தது.. என்பதை மக்கள் மறக்கவில்லை.. ஸ்டாலின்தான் மறந்துவிட்டார். இந்த திமுக ஆட்சியை இழக்கும். இந்த திமுக மீண்டும் அறிவாலயத்தில் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்படும், என்று விஜய் கடுமையாக பேசினார்.
ஆதவ் அர்ஜுனா அதிக நேரம்
ஆனால் விஜயை விட ஆதவ் அர்ஜுனா இதை விட அதிக நேரம் பேசினார். அதில் ஆதவ் அர்ஜுனா ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைதான் போது ஸ்டாலின் பெங்களூரில் இருந்தது, செந்தில் பாலாஜி கரூர் விவகாரம், யார் ரவுடின்னு பாருங்க என்றெல்லாம் பேசியது பெரிய சர்ச்சையானது. அவரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் சந்தித்தது.
முக்கியமாக தேவையில்லாத விவகாரங்களை கிளப்பி ஆதவ் அர்ஜுனா பேசுவது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. முக்கியமாக தவெக நிர்வாகிகளே கடுமையான விமர்சனங்களை ஆதவ் அர்ஜுனா மீது வைத்தனர்.
கோபத்தின் உச்சிக்கே போன விஜய்
இதை எல்லாம் ஜான் ஆரோக்கியசாமி விஜயிடம் கொண்டு சென்றுள்ளாராம். ஆதவ் அர்ஜுனா உங்களை விட அதிக நேரம் பேசி உள்ளார். கரூர் பின் நடக்கும் முதல் பொதுக்குழுவில் பேச வேண்டியதை பேசாமல்.. சர்ச்சையாக பேசி உள்ளார். முக்கியமாக அவரின் பேச்சு ஆளும் தரப்பை கடுப்பாக்கி உள்ளது.. பொதுமக்களையும் கடுப்பாக்கி உள்ளது.
உங்களுடைய பேச்சு கவனம் பெற்று இருக்க வேண்டும். முதல்வர் சட்டசபையில் பேசியதை நீங்கள் விமர்சனம் செய்தீர்கள்.. நீங்கள் பேசியது கவனிக்கப்படாமல்.. ஆதவ் அர்ஜுனா பேசியதுதான் கவனம் பெற்றுள்ளது.. அதுவும் தவறான ரீதியில் கவனம் பெற்றுள்ளது என்று ஜான் ஆரோக்கியசாமி விஜயிடம் கொண்டு சென்றுள்ளாராம்.
இந்த செயல் காரணமாக ஆதவ் அர்ஜுனா மீது விஜய் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமி சொன்ன விஷயங்களை கேட்டு.. விஜய் ஆதவ் அர்ஜுனா மீது கோபத்தின் உச்சியிலே இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications