"ராஜேந்திர பாலாஜியை அடுத்த 6 மாதங்களுக்கு கைது செய்ய கூடாது.. ஆனால்.." செக் வைத்த சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாகவே, ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகமெடுத்து வரும் நிலையில், அவரது திருச்சி மாநாடு குறித்த முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. அத்துடன், ஓபிஎஸ்ஸூக்கு அப்பாவு தந்த அட்வைஸ் பற்றின தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது.. என்னவாம்?

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாகப் பலரும் அவர் மீது புகார் அளித்திருந்தனர். திமுக ஆட்சி அமைந்ததும் அவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது.

அந்த நேரத்தில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் இருந்த நிலையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

ராஜேந்திர பாலாஜி: இருப்பினும், அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நிலையில், 20 நாள் தேடுதலுக்குப் பிறகு போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் கைதாகிக் கொஞ்சக் காலம் சிறையில் கூட இருந்திருந்தார். இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்த நிலையில், பல கட்டுப்பாடுகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Aavin job scam Supreme Court dismissed Rajendra Balajis petition seeking permission to leave outstation

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் ஜாமீனை தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கிடையே கடந்த செப். மாதம் விருதுநகருக்கு வெளியே தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மனு: ஜாமீனை கடந்த செப். மாதம் தளர்த்திய உச்ச நீதிமன்றம் விருதுநகரை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவித்து விட்டுச் செல்ல உத்தரவிட்டிருந்தது. இதனிடையே தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரியும் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை விரிவாக விசாரித்து வருவதாகவும் இவர் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக விசாரித்து முடிக்க 6 மாதங்கள் ஆகும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கைதிற்குத் தடை: விசாரணையை விரைவாக நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணை நடக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

அப்போது ஜாமீன் நிபந்தனைகளை முழுமையாகத் தளர்த்தக் கேட்டுக் கொண்ட ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி, வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி தேவையென்றால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தினர்.

அடுத்த மனு: கட்சி விவகாரங்கள் இப்படி இருந்தாலும், வழக்கு விசாரணைகளில் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லையாம் ஓபிஎஸ்.. அந்தவகையில், தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியின் புகழேந்தி மனு ஒன்றை இன்று அளித்துள்ளார்.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது எனவும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என ,தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், இன்றைய மனுவானது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+