அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஆவின்.. வீடு தேடி வரும் பால் வளத்துறை அதிகாரிகள்.. ஏன் தெரியுமா?
சென்னை: ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக கறவைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை மேம்படுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் உடன் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்கவும், பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரித்தல், அனைத்து ஒன்றியங்கள் மற்றும் இணையத்திலுள்ள பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு முந்தைய ஆய்வுக்கூட்டங்களில் வழங்கிய உத்தரவுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த அறிவுரை வழங்கினார். பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக கறவைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை மேம்படுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்காக 2,528 பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் ஊழியர்கள் அந்தந்த கிராமப்புற பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இக்கருவூட்டல் ஊழியர்கள் மூலம் வருடத்திற்கு ஏறத்தாழ 16.50 இலட்சம் செயற்கை முறை கருவூட்டல்கள் பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு செய்யப்படுகிறது. இச்செயற்கை முறை கருவூட்டல் வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில்19.06.2023 முதல் வேலூர், விழுப்புரம், மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் மாதவரத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்திலும் தற்போது 156 சங்க உறுப்பினர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டார். இவரின் நியமனத்தை தொடர்ந்து ஆவின் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆரஞ்ச் பாக்கெட்: தமிழ்நாட்டில் ஆரஞ்ச் நிற ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்குவதற்கு முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை பால்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. தற்போது ஆரஞ்ச் பால் பாக்கெட்டுகளை வழங்க பெரிதாக கட்டுப்பாடுகள் இல்லை.
ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் இருந்தால் போதும் சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எளிதாக ஆரஞ்ச் பால் பாக்கெட்டுகளை வாங்க முடியும். ஆனால் பலர் போலி மாதாந்திர பால் அட்டைகள் வைத்து இந்த பாலை வாங்குகிறார்கள்.
இதனால் ஆரஞ்ச் பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தடுக்க மாதாந்திர பால் அட்டைகள் புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குடும்ப அட்டை, அல்லது ஆதார் அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை கொடுத்து இதை புதுப்பிக்க அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு ஒரு அட்டைக்கு தினமும் 1 லிட்டர் மட்டுமே ஆரஞ்ச் பால் பாக்கெட் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிரடி மாற்றங்கள்: கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆவினில் விரைவில் தண்ணீர் விற்பனையும் ஆவின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தொடர்ந்து 1 லிட்டர், 200மி.லி குடிநீர் பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆவின்.
ஒப்பந்தம் அடிப்படையில் தண்ணீர் விற்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் அதன்படி ஆரம்ப நாட்களில் இருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாடில்களை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டம் போட்டுள்ளது ஆவின்.












Click it and Unblock the Notifications