விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை ரத்து செய்யுங்கள்..அபுதாபி தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கவும் இந்தியத் தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
துபாய் இந்தியத் துணை தூதரகத்தில் தமிழக தொழில் முனைவோர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பினர் அபுதாபி தமிழ் சங்கம் உள்ளிட்டோர் மற்றும் துபாய்க்கான இந்தியத் துணை தூதர் அமன் பூரி மற்றும் தூதரக அதிகாரிகள் ராம் மற்றும் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழக தொழில் முனைவோர் மற்றும் அமைப்புகள் எக்ஸ்போ 2020 தளத்தில் இந்திய பவிலியனில் இடம்பெறுவது குறித்துக் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. தமிழக பிரமுகர்கள் மற்றும் திறன் மிகுந்த தமிழக பள்ளிக் குழந்தைகளை இந்திய பெவிலியனில் பங்கேற்கச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரத்து செய்யவும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் இலவச இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்து தரவும், இறந்தவர்களின் உடலைக் கட்டணமின்றி தாயகம் எடுத்துச் செல்லவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழகத்தில் நலிவடைந்த பள்ளிகளைத் தேர்வு செய்து அவற்றைப் புனரமைப்பது மற்றும் மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை அமீரகத்திற்கு அழைத்து துபாயில் உள்ள இந்திய பெவிலியன்யில் கவுரவப் படுத்துதல் உள்ளிட்ட வகைகள் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான், தொழிலதிபர் நோபல் மெரைன் சாகுல் ஹமீது, பொதுச்செயலாளர் ஹமீது யாசின், பிர்தவ்ஸ் பாஷா தொழிலதிபர்கள் டி நடராஜன், டிகே ராமன், டாக்டர் சிவராமன் உள்ளிட்ட அபுதாபி தமிழ் சங்கத்தினர் பங்கேற்றனர். இதில் அமீரகத்தில் உள்ள தமிழக அமைப்புகள் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications