சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்பியை பிடிச்சு.. அப்படி குலுங்கி குலுங்கி அழுதாரே "ஏசி" சண்முகம்.. இன்னைக்கு செம "கூல்" போல..!

அதிமுக சார்பாக ஏசி சண்முகம் வேலூரில் போட்டியிடுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: அன்னைக்கு அப்படி குலுங்கி குலுங்கி அழுதாரே "ஏசி" சண்முகம், இன்னைக்கு செம "கூலாகி" இருப்பார் போலும்.. மீண்டும் வேலூர் தொகுதியில் இவருக்கு சீட் தரப்பட்டுள்ளது.. அதே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவாகி உள்ளதாக தெரிகிறது.

இன்று அதிமுக ஒரு உத்தேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.. அதில் கூட்டணிகளுக்கு போக, மீதமுள்ள 171 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட போவதாக தெரிகிறது.

அந்த வகையில்,வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் நிறுத்தப்படுவதாக அந்த லிஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால், கடந்த முறையும் இவருக்கு அதிமுக சீட் வந்தது.

 திமுக

திமுக

இதனால் எப்படியும் துரைமுருகன் மகனை தோற்கடிப்போம் என உள்ளடி வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறதாம். வன்னியர் ஓட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உள்குத்து வேலைகளை செய்து அவரை தோற்கடிப்போம் என்று தொகுதியின் திமுக தரப்பிலேயே உறுமுகிறார்கள்!

 ஏசி சண்முகம்

ஏசி சண்முகம்

கடந்த எம்பி தேர்தலுக்கு முந்தைய தேர்தலில், ஏசி சண்முகம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். அதாவது அதிமுக முதலிடம் என்றால், ஏசி சண்முகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார்.. திமுகவையே 3வது இடத்துக்கு தள்ளிவிட்டார்.. அதனால்தான், இவருக்கு எம்பி தேர்தலின்போது சீட் அதிமுக தந்தது.. போதாக்குறைக்கு இவரிடம் பணத்துக்கு பஞ்சமே இல்லை. தொகுதிக்குள் "தாராளங்கள்" நிறைய காட்டுவார்.. இதுவும் அதிமுகவுக்கு ஒரு பிளஸ்தான்.

 கண்ணீர்

கண்ணீர்

அதனால்தான், துரைமுருகனின் செல்வாக்கு, அரசியல் பலம், பண பலம், வன்னியர் ஓட்டுக்கள் என அனைத்தையும் தாண்டி, வேலூர் தொகுதியில் கடந்த முறை முட்டி மோதினார் ஏசி சண்முகம்.. திடீரென ரெயிடு நடந்து வேலூர் தேர்தல் தள்ளி போக, அப்படியே இடிந்து போய்விட்டார்.. கண்ணீர் விட்டு கதறினார்..

ரத்தானது

ரத்தானது

"அவர்கள் செய்த தப்புக்கு நான் என்ன பண்ண முடியும்" என்பது போலவே கண்கலங்கி காணப்பட்டார்.. தேர்தல் ரத்தானது.. கோர்ட், கேஸ் என்று நடையாய் நடந்தார்.. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கமும் இருந்து கொண்டே இருந்தது.. இதற்கு நடுவில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.. அன்றைய தினம் தனது வாக்கை பதிவு செய்ய ஏசி சண்முகம் வந்திருந்தார். ஆரணி - கொசப்பாளையத்திலுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில்தான் இவருக்கு ஓட்டு இருந்தது.

கதறல்

கதறல்

வாக்களிக்க அந்த பூத்துக்குள் நுழைந்தவரை புதிய நீதி கட்சி ஆரணி நகர செயலாளர் கணேசன் வரவேற்க சென்றார். ஆனால் ஏசி சண்முகத்தை பார்த்ததும் அடக்க முடியாமல் அழுதுவிட்டார்... உடனே அங்கிருந்த ஏசி சண்முகமும் செய்தியாளர்களிடம் பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார்.. பிறகு தன்னையும் தேற்றிக் கொண்டு, கணேசனுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு ஓட்டு போட சென்றார். பிறகு வெளியே வந்த ஏசி சண்முகத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

பிளாஷ்பேக்

பிளாஷ்பேக்

அப்போதும் பேச முடியாமல் திரும்பிக்கொண்டு அங்கிருந்த இரும்புக் கம்பியை பிடித்து கொண்டு கதறி கதறி அழுதார். அவருடன் வந்தவர்கள் அவரை தேற்றினார்கள்.. இப்படியெல்லாம் ஒரு பிளாஷ்பேக் ஏசி சண்முகத்துக்கு இருக்கவே செய்கிறது.. ஆனால், இந்த முறை அப்படி எல்லாம் இருக்காது என்றே நம்பப்படுகிறது.. சீட் தந்துவிட்டார்கள்.. இனி ஏசி குளுகுளுவென வேலூர் முழுவதும் அடிக்க போகிறது..!

English summary
AC Shanmugam may contest in the Same Vellore Consitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X