பாஜகவுடன் கூட்டணி உறுதி.. சென்னையில் ஜேபி நட்டாவை வரவேற்ற 3 பிற கட்சி தலைவர்கள்.. கவனிச்சீங்களா!
சென்னை: சென்னை துறைமுகம் சட்டசபை தொகுதியில் நடக்கும் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை பிற கட்சிகளை சேர்ந்த 3 தலைவர்கள் வரவேற்றனர். இதன்மூலம் பாஜகவுடன் அவர்கள் கட்சி கூட்டணி வைப்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடங்கி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு இந்த யாத்திரை தென்மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சென்னைக்குள் நுழைந்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நடந்தது.
இந்த யாத்திரை மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் தமிழக பாஜகவின் அழைப்பை ஏற்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து இன்று மாலையில் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து ஜேபி நட்டா சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜேபி நட்டாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா, பாஜக எம்எல்ஏக்கள் வரவேற்றனர். அதேபோல் ஜேபி நட்டாவை பிற கட்சிகளின் 3 தலைவர்களும் வரவேற்றனர்.
அதாவது புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோரும் ஜேபி நட்டாவை வரவேற்றுள்ளனர். இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து ஆகியோர் ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்து விட்டார்.
ஆனால் ஜான் பாண்டியன் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் வெளிப்படையாக கருத்து கூறாமல் இருந்து வந்தார். இவர் இதற்கு முன்பு தமிழகத்தில் அதிமுக-பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகித்தார். தற்போது அந்த கூட்டணி என்பது பிளவுப்பட்டுள்ளது. இதனால் ஜான் பாண்டியன் அதிமுக அல்லது பாஜக2 கட்சிகளில் யார் பக்கம் செல்கிறார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான் இன்று அவர் ஜேபி நட்டாவை வரவேற்றதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. அதோடு வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்று அவர் தனது மகளை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் வரும் தேர்தலில் பாஜக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுகவின் எம்பியாக உள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஏசி சண்முகம் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதேபோல் ரவி பச்சமுத்துவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இன்று சென்னை வந்துள்ள ஜேபி நட்டா நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்க உள்ளார். இத்தகைய சூழலில் ஏசி சண்முகம், ரவி பச்சை முத்து, ஜான் பாண்டியன் ஆகியோர் ஜேபி நட்டாவை வரவேற்றுள்ளனர். இதனால் பாஜக கூட்டணியில் அவர்கள் 3 பேரின் கட்சிகளும் இடம்பெறுவது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications