Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் FIR விவரங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை..சென்னை போலீஸ் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வழக்கு தொடர்பான விவரங்கள் ஆன்லைனில் வெளியாகியது. அதில் மாணவி பெயர், முகவரியுடன் எஃப்ஐஆர் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனிடையே இந்த எஃப்ஐஆரை உடனடியாக சென்னை காவல்துறை முடக்கி உள்ளது. அதேநேரம் அந்த எப்ஐஆரை சமூக ஊடகங்களில் யாராவது பகிர்ந்தால் அல்லது ஆன்லைன் ஊடகங்களில் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் எஃப்ஐஆர் ஆன்லைனில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

anna university chennai

பொதுவாக பாலியல் வழக்குகள், போக்சோ வழக்குகள் தொடர்பான எஃப்ஐஆர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றாவளிகளுக்கு மட்டுமே தரப்படும்.. மற்றவர்களுக்கு தரப்படுவது கிடையாது. செய்தியாளர்களுமே இது போன்ற வழக்கில் எஃப்ஐஆர் விவரங்களை பெற்றாலும், அந்த பெண் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிடக்கூடாது என்பது சட்டம் ஆகும். மீறி வெளியிடப்படும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்நததாக கூறப்படும் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட முழு விவரங்களுடன் ஆன்லைனில் எஃப்ஐஆர் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவசரமாக பதிவேற்ற வேண்டிய அவசியம் என்ன, பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதற்கு காவல்துறை, பல்கலைக்கழகம் பொறுப்பேற்குமா என்று சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

இந்த விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில், அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் விவரங்களை காவல்துறை ஆன்லைனில் முடக்கி உள்ளது. அதேநேரம் அந்த எப்ஐஆரை சமூக ஊடகங்களில் யாராவது பகிர்ந்தால் அல்லது ஆன்லைன் ஊடகங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது.

முன்னதாக சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறுகையில், " சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+