நடிகை திவ்யாவுக்கு டார்ச்சர்.. வேறு நடிகையுடன் தொடர்பு.. ஆஜராக டைம் கேட்ட நடிகர் அர்னவ்
சென்னை: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீயை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளார் நடிகர் அர்னவ்.
செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சக சீரியல் நடிகர் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கிறார்.
இந்த நிலையில் அர்னவிற்கு செல்லம்மா சீரியிலில் நடித்து வரும் அன்ஷிதாவுடன் நெருக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை கண்ணால் பார்த்த திவ்யா , கணவர் அர்னவ்விடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அர்னவ்
இந்த சண்டையில் அர்னவ், திவ்யாவை கர்ப்பிணி என்றும் பாராமல் வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் கீழே விழுந்த திவ்யாவின் கைகளை தனது காலால் மிதித்ததால் மயக்கமடைந்த திவ்யா சுயநினைவுக்கு வந்தவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வேறு ஒரு நடிகையுடனான தொடர்பில் அர்னவ் தன்னை விட்டுவிட்டு அந்த நடிகையுடன் செல்ல முயற்சிக்கிறார் என போலீஸில் புகார் அளித்தார்.

அர்னவ் மறுப்பு
ஆனால் இந்த புகாரை அர்னவ் மறுத்துள்ளார். திவ்யாதான் நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து கொண்டு எனது குழந்தையை அழிக்க பார்க்கிறார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருப்பதை என்னிடம் மறைத்துள்ளார். எனினும் எனக்கு மனைவி திவ்யா வேண்டும். அவருடன் இருப்பவர்கள்தான் எனக்கு எதிராக திவ்யாவை திருப்புகிறார்கள் என மீடியாவில் குற்றம்சாட்டினார் அர்னவ்.

கர்ப்பிணி
இந்த நிலையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் மகளிர் போலீசார் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் மகளிர் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

தலைமறைவான அர்னவ்?
இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகர் அர்னவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் நடிகர் அர்னவ் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஆஜரானால் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் ஆஜராக கால அவகாசம் தருமாறு அர்னவ் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications