கன்னட சர்ச்சைக்கு நடுவே கமல்ஹாசன் செய்த சம்பவம்..நடிகர் சிவராஜ்குமாருக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து
சென்னை: கன்னட நடிகர் சிவராஜ் குமார் திரையுலகில் 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு திரைத் துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிவராஜ் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். மேலும், கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் நடிகர் கமல்ஹாசன், அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று தெரிவித்தார். இதுகுறித்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது கமல்ஹாசனுக்குத் தெரியாது என்று கூறினார்.
இதுகுறித்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் கூறுகையில், கமல்ஹாசன் கன்னட மொழி மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பெங்களூர் குறித்து கூறுவதற்கு அவரிடம் நல்ல விஷயங்கள் மட்டுமே உள்ளன. நான் கமல் சாருக்கு பெரிய ரசிகன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என்ன கூறினார் என்பது கமல் சாருக்கு தெரியும். அவர் தகுந்த பதிலை கூறுவார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள் என்றும் கூறி நடிகர் சிவராஜ்குமார் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியிருந்தார். இந்நிலையில், திரைத்துரையில் 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய கமல்ஹாசன், சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவைப் பொருத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடியதென்று எனக்கு தெரியவில்லை. இன்று மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிற விஷயம்.. இனியும் சாதிக்கக்கூடிய விஷயம்.. எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications