ஸ்பாட்டில் நின்ற மன்சூர் அலிகான்! எங்கு வந்து எப்படி போனாங்க? ராணுவம் ஏன் புடிக்கல: ஆபரேஷன் சிந்தூர்
சென்னை: இந்தியாவின் பெரும்பான்மையான மாநில மக்கள் சந்தோஷமாக இருக்கும்போது, காஷ்மீரிகளுக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலைமை? என்று ஆதங்கத்துடன் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த மன்சூர் அலிகான், பஹல்காம் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலில் இருந்தது எந்த நாட்டின் புல்லட்? என்று நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காமிலுள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.. இந்த கொலைவெறி தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள்..

இந்த துப்பாக்கிசூடு சம்பவம் உலகையே உலுக்கிவிட்டது.. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாக துவங்கிவிட்டது.. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்திய ராணுவம்
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் இன்று விடிகாலையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.. இன்று காலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது..
அதேசமயம், பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கமும் தந்துள்ளது..
நடிகர் மன்சூர் அலிகான்
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் மன்சூர் அலிகான் காஷ்மீருக்கு நேரடியாக சென்றுள்ளார்.. அங்கு சில போட்டோக்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்..
இது தொடர்பாக மன்சூரலிகான் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கிருந்து வந்தாங்க.? எப்படி போனாங்க? இராணுவம் சுற்றி வளைத்து ஏன் புடிக்கல? துப்பாக்கிச் சூட்டில் இறந்த என் மக்களின் உடம்பில் இருந்தது எந்த நாட்டினுடைய புல்லட்? அரசை கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லையா என்ன? பதவிக்காக அப்பாவி மக்களை ஏன் பலி குடுக்குறீங்க?" என்று பதிவிட்டிருக்கிறார்.
உருண்டு புரண்டு வீடியோ
கடந்த 22ம் தேதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் அனைவரும் பீதியில் கிடந்தபோது, அதே காஷ்மீருக்கு சென்றார் நடிகர் மன்சூரலிகான்.. பனிக்கட்டியில் உருண்டு புரண்டு வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். ஆனால், யாருடன் காஷ்மீர் சென்றார் என தெரியவில்லை. இந்த கலவரத்தில் இவர் ஏன் அங்கு சென்றார்? என்று பலரும் வியப்புடன் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பிறகு ஒரு பிரபல சேனலுக்கு மன்சூர் அலிகான் தந்திருந்த பேட்டியில், காஷ்மீரில் நண்பர் வீட்டு திருமணத்துக்காக குடும்பத்துடன் வந்திருப்பதாக கூறியிருந்தார்..
அதுமட்டுமல்ல அந்த பேட்டியில் மன்சூரலிகான் பேசும்போது, "இந்தியாவின் பெரும்பான்மையான மாநில மக்கள் சந்தோஷமா இருக்கும்போது, காஷ்மீரிகளுக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலைமை? ராணுவ பாதுகாப்பை முன்கூட்டியே செய்திருந்தா, அத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்க மாட்டாங்களே? காப்பாற்றப் போன காஷ்மீரிகளும் உயிரிழந்திருக்கமாட்டாங்களே? ஒரு பிரபலமான சுற்றுலா தலத்தில் எப்படி சிசிடிவி இல்லாம போகும்? ஒரு வாட்ச்மேன் கூட இல்லையே?
மத அடிப்படைவாதம்
பார்டலிருந்து பல நூறு கிலோமீட்டர் தாண்டி பஹல்காம் இருக்கு. அவ்ளோ தூரத்திலிருந்து கடுங்குளிர்ல காட்டுவழியில வந்து எப்படி சுடமுடியும்? எப்படி வந்திருப்பாங்கன்னு மக்களே கேள்வியெழுப்புறாங்க. நான் மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவன். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை ஏத்துக்கவே முடியாது" என்றெல்லாம் ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.
இப்போது, துப்பாக்கிச் சூட்டில் இறந்த என் மக்களின் உடம்பில் இருந்தது எந்த நாட்டினுடைய புல்லட்? என்று இன்றைய தினம் மன்சூரலிகான் எழுப்பியிருக்கும் கேள்வி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications