சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'இன்று மட்டும் நம் விரலில்' திருக்குறள் மாறி இரண்டே வரியில் எச்சரிக்கும் பார்த்திபன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் திருக்குறள் போல் 2 வரியில் வாக்கின் வலிமை குறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

    தமிழகத்தில் வேலுரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

    Actor parthiban inspiration and alert tweet about today polls

    மக்கள் தாங்கள் விரும்பும் அரசு அமைவதற்காக காலை 7 மணி முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் திரை உலகினர் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் இன்று காலை 7.30 மணி அளவில் வெளியிட்ட டுவிட்டில் மக்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லி உள்ளார்.

    அதாவது "எதுவும் நம்ம கையில இல்ல" விரக்தி வேண்டாம்! இன்று மட்டும் நம் விரலில்!!! என குறிப்பிட்டுள்ளார்

    இதன்படி யாரோ ஒருவரை வாக்களித்து, மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துவிட்டு, அவர் ஒன்றும் செய்யவில்லை என்று ஏங்கும் போது மக்கள் எதுவும் நம்ம கையில் இல்ல, எல்லாம் ஆள்றவங்க கையிலதான் இருக்கு என விரக்தியுடன் பேசுவார்கள். அதை எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ள பார்த்திபன், நாம் கைகளில் மை தடவி ஒரு விரல் புரட்சி நடத்தி சரியான ஒருவருக்கு வாக்களிக்க இன்று நாள் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் போல் இரண்டே வரியில் மொத்த விஷயத்தையும் சொல்லியிருக்கிறார் பார்த்திபன். உஷாராக வாக்களிப்பது மக்களே அது உங்கள் கையில் தான் இருக்கிறது.

    மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜீத்.. நடிகரைக் காண அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்.. பரபரப்பு மனைவியுடன் வாக்களிக்க வந்த அஜீத்.. நடிகரைக் காண அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்.. பரபரப்பு

    English summary
    Tamilnadu: Actor parthiban inspiration and alert tweet about today lok sabha polls
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X