Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Actor Rajesh: கனடாவில் இருந்து வந்த மகள் திவ்யா! நடிகர் ராஜேஷின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனடாவில் இருந்து மகள் திவ்யா சென்னை வந்துவிட்டதால் நடிகர் ராஜேஷின் உடலுக்கு இன்று பிற்பகல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. தந்தையின் உடலை பார்த்ததும் திவ்யா கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது. ராஜேஷ் உடலுக்கு நாளை இறுதிச் சடங்குகள் என சொல்லப்பட்ட நிலையில் இன்றே இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன.

பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராஜேஷ் , இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர் என்றால் அது ராஜேஷ்தான் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.

rajesh tamil nadu

அந்த அளவிற்கு ராஜேஷின் நடிப்பில் யதார்த்தம் இருக்கும். கதை நன்றாக இருந்தால் மட்டுமே ராஜேஷ் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால் அவருடைய படத்தை ரசிகர்கள் தைரியமாக பார்ப்பார்கள். அவர்கள் டிக்கெட் வாங்கும் காசு வீண் போகாது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக யூடியூபில் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தெரிவித்து வந்தார். அதுபோல் 99 வயது வரை வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் கூறி வந்தார்.

இந்த நிலையில் அண்மையில் துபாய்க்கு ஒரு நிகழ்வுக்காக சென்றிருந்த அவர் கடந்த 28ஆம் தேதி சென்னை திரும்பினார். அவருக்கு ஊரில் இருந்து வந்ததிலிருந்தே சளி தொல்லை, நெஞ்சு சளி என இருந்ததாக சொல்லப்படுகிறது.

இது ஊர் விட்டு ஊர் போகும் போது அவருக்கு ஏற்படும் அசவுகரியங்கள் என்பதால் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அதிகாலை ராஜேஷுக்கு அதிக அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தனது மகனையும் தம்பி சத்யனையும் அழைத்தார். உடனே ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அப்போது ராஜேஷின் ஆக்ஸிஜன் அளவு குறைந்திருந்தது. இந்த நிலையில் ராஜேஷை ஆம்புலன்ஸில் ஏற்றியதுமே அவர் இறந்துவிட்டார்.

எனினும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் காலமானதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ராஜேஷின் இறப்புக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் போய் அஞ்சலி செலுத்தினார்.

ராஜேஷுக்கு மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். அவருடைய மகன் தீபக், ராஜேஷுடன் வசித்து வந்தார். மகள் திவ்யாவிற்கு திருமணமாகி கனடாவில் வசித்து வருகிறாராம். அவர் வந்ததும் நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என சொல்லப்பட்டது. இதனால் ராஜேஷின் உடல் எம்பார்மிங் எனும் பதப்படுத்துதல் முறைக்காக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஜேஷின் மகள் திவ்யா சென்னைக்கு வந்துவிட்டார். அவர் தனது தந்தையின் உடலை பார்த்ததும் கதறி துடித்தார். திவ்யா வந்துவிட்டதால் இன்று பிற்பகல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+