துபாயிலிருந்து வந்ததுமே!ஆம்புலன்ஸில் ஏற்றியதும் அப்பா செய்த செயல்! நடந்தது என்ன? ராஜேஷ் மகன் கண்ணீர்
சென்னை: அப்பாவை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிய போது எனது கையை பிடித்துக் கொண்டு எனக்கு முத்தம் கொடுத்தார், அதன் பின்னர் அவருடைய உயிர் என் கைகளில் பிரிந்தது என ராஜேஷின் மகன் தீபக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ராஜேஷின் மகன் தீபக் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: அப்பா இத்தனை பேரிடம் எவ்வளவு பெயர், புகழ், மரியாதையை சம்பாதித்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள், இனி வரக் கூடிய நடிகர்களுடனும் நானும் அப்பாவும் தனிப்பட்ட முறையில் பழகியிருக்கிறோம்.

அவங்க வீட்டு விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட விழாக்களுக்கு நாங்கள் சென்றிருக்கிறோம். அப்போதெல்லாம் எல்லாருமே என்னை தனியாக அழைத்து அப்பாவை பற்றி பெருமையாக சொல்வார்கள்.
மனிதன் சம்பாதிப்பது
இத்தனை பேரை ஒரு மனிதன் சம்பாதிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு மகனாக என் அப்பாவை நினைத்து நான் பெருமையடைகிறேன். அவர் சம்பாதித்த பெயரில் பாதியாவது நான் சம்பாதிக்க முயற்சிப்பேன். அப்படி செய்தால்தான் என் அப்பாவின் ஆத்மா சாந்தியடையும்.
அப்பாவுக்கு இத்தனை வட்டாரம்
கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதெல்லாம் அவர் நன்றாகத்தான் இருந்தார். மாத்திரைகளை ஒழுங்காக போடுவார். இரு நாட்களுக்கு முன்பு துபாய் போய்விட்டு வந்தார். அவர் அங்கு என்ன சாப்பிட்டார் என தெரியவில்லை. என்னால் அவருடன் இந்த முறை உடன் செல்ல முடியவில்லை.
நுரையீரலில் சளி
எப்போதும் நான் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார். அவர் வேறு நாட்டு தண்ணீர் குடித்தால் கூட நுரையீரலில் சளி சேர்ந்துவிடும். துபாயில் இருந்து சளி பிடித்ததுடனேயே அப்பா வந்திருந்தார். என்னோட கல்யாண வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன்.
மாத்திரை
நேற்று லேசாக சளி பிடித்தது. உடனே அவருக்கு தைலம் தடவிவிட்டு மருந்து மாத்திரைகளை கொடுத்தேன். காலை 5.30 மணிக்கு எழுப்பி, அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக சொன்னார். ஆனாலும் மருத்துவமனைக்கு வேண்டாம் என சொன்னார்.
ஆக்ஸிஜன் குறைந்தது
ஆனால் நான்தான் விடாப்பிடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தேன். நான் வீட்டின் மாடியிலிருந்து அவரை கீழே தூக்கிக் கொண்டு வரும் போது ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டது. ஸ்ட்ரெச்சரில் வைத்தோம்.
108 ஆம்புலன்ஸ்
அப்போது என் கையை பிடித்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாரு. பிறகு அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி, அவருடைய தலையை அட்ஜெஸ்ட் செய்த போது எனது கைகளிலேயே உயிர் போய்விட்டது. அப்போதும் எனக்கு மனசு கேட்கவில்லை. 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றார்கள்.
அப்பா படம் பார்த்தார்
நான் நடித்த படங்களை அப்பா பார்த்திருக்கிறார். என்னை பாராட்டினார். என் சொந்தக்காரர்கள், அவருடைய நண்பர்களிடமும் அப்பா என்னை பற்றி பெருமையாக சொல்லியிருந்தார். என் கல்யாணத்தை அப்பாவால் பார்க்க முடியவில்லை. ஆனால் எனது படத்தை பார்த்துவிட்டு சென்றது எனக்கு ஆறுதலாக இருக்கிறது என கலங்கியபடியே சொன்னார்.
இறுதிச் சடங்கு
ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் அவருடைய மகன்தான் ராஜேஷை பார்த்துக் கொண்டிருந்தார். மகள் திவ்யா வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வருவதற்கு தாமதம் ஏற்படும் என்பதால் இறுதி சடங்குகள் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications