விஜயகாந்தை திட்டிய வடிவேலு! ஆனால் கேப்டன் என்ன செய்தார் தெரியுமா? சாரைப்பாம்பு சுப்புராஜ் நெகிழ்ச்சி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை வடிவேலு மிகவும் மோசமாக விமர்சித்த நிலையில் கேப்டனோ பெருந்தன்மையாக என்ன செய்தார் தெரியுமா?
வைகை புயல் வடிவேலு, மதுரையை சேர்ந்தவர். இவர் தனக்கென ஒரு காமெடி டிராக்கை உருவாக்கியுள்ளார். இவரது காமெடி கிராமப்புற மக்களையும் கவர்ந்திழுத்து சிரிப்பை வரவழைக்கின்றன. சாதாரணமான விஷயத்தை காமெடியாக சொல்வதில் வல்லவர்.

இவரது காமெடியை விட இவரது முக பாவனையும் பாடி லேங்குவேஜும் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும். எவர்கிரீன் காமெடி போல் எப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும். இவரது 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார்.
அந்த தேர்தலில் 2005 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய விஜயகாந்தும் போட்டியிட்டார். மருதமலை படத்தில் வடிவேல் தனது காமெடியில் "எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என சொல்வார். அதை வார்த்தையில் விஜயகாந்தை வடிவேலு விமர்சித்தார்.
"விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொடுத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேசினார்.
திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன் என்றார்.
மேலும் கேப்டனாம் கேப்டன் எந்த கப்பலுக்கு கேப்டன் என கடுமையாக விமர்சித்திருந்தார். அது வரை அனைவருக்கும் பொதுவாக இருந்த வடிவேலு எப்போது விஜயகாந்தை விமர்சித்தாரோ அப்போது முதல் அவர் மார்க்கெட் இறங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது. வடிவேலுவை அவருடன் காமெடி டிராக்கில் இருந்த சாரைப்பாம்பு சுப்புராஜ், போண்டா மணி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் வடிவேல் தன்னை என்னதான் விமர்சித்திருந்தாலும் தன்னிடம் விஜயகாந்த் என்ன சொன்னார் என்பதை நடிகர் சாரைப்பாம்பு சுப்புராஜ் விளக்கியுள்ளார். அதில் ஒரு முறை நான் விஜய் வீட்டருக்கே சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த கேப்டன் விஜயகாந்தின் கார் என்னை பார்த்தும் நின்றது.
அப்போது யாருனு பார்த்தால் அதுல கேப்டன் இருந்தார். உடனே டேய் இங்க வாடானு கூப்பிட்டார். நான் என்ன அண்ணேனு கேட்டேன். வடிவேலு நடிக்க சொல்றானு சொன்னாரு. ஏன் ஆள வச்சு அடிக்குறதுக்கானு கேட்டேன். இல்லடா அவன் காமெடி தான்டா நல்லா இருக்கு. அவன நடிக்க சொல்லுனு சொன்னாரு. நான் இத போய் வடிவேலுகிட்ட சொல்லட்டுமானு கேட்டேன்.
போய் சொல்லுனு சொல்லிவிட்டு கிளம்பிட்டாரு. உடனே வடிவேலுவிடம் போய் விஜயகாந்த் சொன்னதை சொன்ன போது அவர் ஆச்சரியப்பட்டார். அது மட்டுமல்லாமல் வடிவேல் என்னை பற்றி என்ன பேசினாலும் அவரை யாரும் தவறாக பேசக் கூடாது என விஜயகாந்த் எங்களிடம் சொன்னார் என சாரைப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications