Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 2 தொகுதிக்கு குறி.. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கைகோர்க்கும் சரத்குமார்? மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணையலாம் எனவும், பாஜக கூட்டணியில் 2 முக்கிய தொகுதிகளை அந்த கட்சி கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தொகுதி என்னென்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் என்பது வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த தேர்தலில் வென்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ராமர் கோவில் திறப்பு, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றி உள்ளிட்டவற்றால் வடமாநிலங்களிலும் பாஜக வழக்கம்போல் அதிக இடங்களை வெல்லும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் உள்ளனர்.

Actor Sarathkumars party may joins the BJP alliance targeting 2 constituencies in the parliament election?

ஆனால் தென்மாநிலங்களை பொறுத்தமட்டில் பாஜகவுக்கு சற்று பின்னடைவான சூழல் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மாநில கட்சிகளின் செல்வாக்கு கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உள்ளிட்டவை பாஜகவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. மாறாக கர்நாடகா மட்டும் பாஜகவுக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதால் அங்கும் பாஜகவுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தான் தமிழ்நாட்டில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் மக்களின் எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்யும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற்றப்பட்டுள்ளதால் தனியாக கூட்டணி அமைத்து களமிறங்க பாஜக திட்டமிட்டுள்ளது. திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளை இணைத்து பாஜக போட்டியிட வியூகம் வகுத்து வருகிறது.

அதன்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் அணியினர், டிடிவி தினகரனின் அமமுக, பாமக, மறைந்த நடிகர் விஜயகாந்தின் தேமுதிக உள்பட இன்னும் சில கட்சிகளை இணைத்து 3வது அணியாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. சமீபகாலமாக நடிகர் சரத்குமார் பாஜக ஆட்சி மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டி வருவது தான் இதற்கு சான்றாகும்.

இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்கு தலைவர் சரத்குமாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த களமிறங்குவது பற்றியும், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றியும் நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை செய்துள்ளார். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளை பாஜக கூட்டணியில் கேட்டு பெற சரத்குமார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார் ஏற்கனவே தென்காசி தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

இருப்பினும் கூட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது தென்மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரத்குமார் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இந்த செல்வாக்கை பயன்படுத்தி தான் கன்னியாகுமரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிகளை கேட்க சரத்குமார் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த தொகுதிகள் பாஜக கூட்டணியில் கிடைக்குமா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் இந்த 2 தொகுதிகளும் அடங்கும். குறிப்பாக கன்னியாகுமரியை எடுத்து கொண்டால் அங்கு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதாகிருஷ்ணனின் சொந்த தொகுதியாகும். 2014ல் இங்கு வென்ற அவர் கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் அவர் களமிறங்க தயாராகி வருகிறார். இதனால் கன்னியாகுமரி தொகுதி என்பது சரத்குமார் கட்சிக்கு கிடைப்பது கேள்விக்குறியாகலாம்.

அதேபோல் திருநெல்வேலி தொகுதியை எடுத்து கொண்டால் அங்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் சமத்துவ மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்தால் திருநெல்வேலி தொகுதி அவருக்கு ஒதுக்கீடு செய்ய பாஜக முன்வரலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் பாஜக கூட்டணியில் சரத்குமார் கட்சி இணைகிறதா? இணைந்தால் பாஜக சார்பில் எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகிறது? எந்தெந்த தொகுதிகள் வழங்கப்படுகிறது? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+