Actor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Surya Emotional Moment | Agaram Foundation Book Launch

    சென்னை: தயவு செய்து நீங்கள் படித்த பள்ளிக்கு மீண்டும் செல்லுங்கள். அந்த பள்ளிக்கு உதவுங்கள் என நடிகர் சூர்யா பேசினார்.

    அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

    இந்த அறக்கட்டளை மூலம் மாணவர்கள் கல்வி கற்க உதவி வருகின்றனர். இந்த நிலையில் இந்த அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற நிகழ்ச்சி சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.

    சுதாரித்து பேசிய சூர்யா

    சுதாரித்து பேசிய சூர்யா

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா அகரத்தின் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ, அவரது தாய், தந்தை ஜெயஸ்ரீயின் குழந்தை ஆகியோரை மேடையேற்றி நன்றி தெரிவித்தார். பின்னர் அவரை அறியாமல் கண் கலங்கினார். பின்னர் சுதாரித்து கொண்டு மேடையில் பேசினார்.

    உயர்ந்த இடம்

    உயர்ந்த இடம்

    அவர் கூறுகையில் நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளேன். அனைத்து தன்னார்வலர்களின் சார்பில் இருவரை மேடைக்கு அழைத்துள்ளேன். வழிகாட்டியோர், உழைப்போர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகரம் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த இடத்தை அடைந்துள்ள தம்பி, தங்கைகள் மட்டுமே எங்கள் உந்து சக்தி.

    குடும்பம்

    குடும்பம்

    எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், எவ்வளவு பணம் செலவளிக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு மணி நேரம் மற்றவர்களுக்காக செலவிட்டாலும் அதை சிறப்பாக முறையாக செய்து முடிக்க வேண்டும். யார் கேட்டாலும் உதவுங்கள். தன் வேலை, தன் குடும்பம் என நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

    கஷ்டங்கள்

    கஷ்டங்கள்

    நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்களோ அந்த பள்ளிக்கு தயவு செய்து மீண்டும் செல்லுங்கள். அந்த பள்ளிக்கு உதவுங்கள். கிராம சபை கூட்டங்களுக்கு செல்லுங்கள். கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வார உதவுங்கள். நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றார். ஏற்கெனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா ஒரு மாணவியின் கஷ்டங்களை கேட்டு அந்த மேடையிலேயே அழுதார்.

    மாறிவிடுங்கள்

    மாறிவிடுங்கள்

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியும் பேசினார். அவர் பேசுகையில் நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். கிடைக்கும் நேரத்தில் தன்னார்வலர்களாக மாறிவிடுங்கள். என்னிடம் இல்லாத சிந்தனை உங்களிடம் உள்ளது. நான் இங்கு விருந்தாளியாகவே வந்துள்ளேன் என்றார் கார்த்தி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+