சைக்கிளுக்கு நோ.. சிவப்பு காரில்.. கருப்பு மாஸ்க்கோடு வாக்களிக்க வந்த விஜய்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அதிகாலையில் முதல் ஆளாக நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுக்க 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
அதிகாலையில் இருந்து மக்கள் ஆர்வமாக நின்று வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

விஜய்
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று அதிகாலையிலேயே வாக்களிக்க நீலாங்கரைக்கு வந்தார். நீலாங்கரையில் நடிகர் விஜய்க்கு வாக்கு உள்ளது. அதிகாலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் சரியாக 7 மணிக்கு விஜய் அங்கே காரில் வந்தார். அவருடன் அவரின் பாதுகாவலர்களும் வந்தனர். சொகுசு காரில் வரமாக பழைய மாடல் சிறிய மாருதி கார் ஒன்றில் விஜய் வந்தார்.

ரசிகர்கள்
விஜய் வந்ததும் அங்கே ரசிகர்கள் பலர் கூட்டமாக குவிந்தனர். இதனால் விஜயின் கார் நகர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கார் ஒரே இடத்தில் சில நிமிடங்கள் முடங்கியது. இதனால் அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் அவர்கள் காருக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இங்கே அதிக அளவில் இருந்தனர்.

கூட்டம்
அவ கருப்பு நிற மாஸ்க் அணிந்து இருந்தார்.இங்கு விஜய் முதலில் வரிசையில் நின்று வாக்களிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அங்கு கூட்டம் அதிகமாகிவிட்டது. விஜய் ரசிகர்கள் அதிக அளவில் அவரை பார்ப்பதற்காக பலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் நடிகர் விஜயை வரிசையில் நிற்க வேண்டாம் என்று கூறினார்கள்.

உள்ளே சென்றார்
இதனால் விஜய் நேராக உள்ளே சென்று வாக்களித்தார். முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். சிவப்பு - கருப்பு சைக்கிளில் வந்து விஜய் வாக்களித்தார். அப்போது விஜய் பெட்ரோல், டீசல் விலையை கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் விஜய் இந்த முறை மாருதி காரில் வந்துள்ளார். இந்த தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கமும் தனி தனி சின்னங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications