கடந்த காலம் எடப்பாடி.. நிகழ்காலம் ஸ்டாலின்.. எதிர்காலம் விஜய்.. மதுரையை தெறிக்க விடும் ரசிகர்கள்
சென்னை : அரசியல் பயணத்தை ஆரம்பித்து விட்டார் நடிகர் விஜய். அதற்கு அச்சாரமாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் ஆளுங்கட்சியான திமுகவையும் எதிர்கட்சியான அதிமுகவையும் வம்பிழுக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே.. ஆண்டவர் ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வனே என்று மதுரை நகரின் முக்கிய வீதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள். இன்று நேரு அரங்கத்திற்கு வருவதைத் தடுக்கலாம் - நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது என மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. பாதுகாப்பு கருதி இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது.
இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு அரசியல் அழுத்தம் இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், சர்ச்சையைக் கிளப்பும் வகையில் போஸ்டர்களை ஒட்டியும் பதிவு செய்து வருகின்றனர்.
மதுரையில் விஜய் ரசிகர்கள் நேரடியாக ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் நாற்காலியில் விஜய் அமர்ந்திருக்க, 'இன்று நீங்கள் நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம் ஆனால், நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது' என சர்ச்சையை கிளப்பும் வார்த்தைகளுடன் கூடிய போஸ்டர்களை நகரின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கடந்த காலம் எடப்பாடி பழனிச்சாமி, நிகழ்காலம் மு.க ஸ்டாலின், எதிர்காலம் தளபதி விஜய் என்றும் போஸ்டர் ஒட்டி விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று போஸ்டர் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் போல நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது. கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. ஆடியோ வெளியீட்டின் போது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ஒட்டும் வாழ்த்து போஸ்டரில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுப்பார்கள்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்தார் விஜய். தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தவும் அனுமதி அளித்தார் விஜய். விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்று விஜய் கட்சியின் அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டனர். வெற்றி பெற்ற ரசிகர்களை சந்தித்தார் விஜய்.
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது போல் அவரது ரசிகர்களையும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறார். மழை, வெள்ளப் பாதிப்பு, கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருந்தனர். அதன் பலனை நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அறுவடை செய்தனர். கணிசமான அளவில் வெற்றி பெற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன்மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறி தான் என்று தகவல் பரவியது.
பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்த விஜய் அந்த மேடையில் அரசியல் பேசினார். மாணவர்களும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே விஜய் ரசிகர்கள் தற்போது ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்கு எதிராக அரசியல் யுத்தத்தை தொடங்கி உள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டி தெறிக்க விட்டு வருகின்றனர்.
-
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா?












Click it and Unblock the Notifications