துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களால் விபத்து.. தடுக்க புதிய ஐடியா சொன்ன விஜய்!..
புதுக்கோட்டை புகழேந்தி சம்பவம்.. "இப்படி செய்திருந்தால்" உயிர் போயிருக்காது.. நடிகர் விஜய் உருக்கம்
சென்னை: புதுக்கோட்டையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து வந்த குண்டு பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை படித்த போது மிகவும் வருத்தத்துடன் நான் என்ன நினைத்தேன் தெரியுமா என விஜய் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக சன் டிவியில் விஜய் அளித்த சிறப்பு பேட்டி நேற்று இரவு வெளியானது.
10 ஆண்டுகள் கழித்து விஜய் பேட்டி கொடுத்ததால் ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். இயக்குநர் நெல்சனுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அண்மைக்காலமாக சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். எப்போதுமே சமூகம் சார்ந்த விஷயங்களை செய்திகளில் படிப்பீர்களா என கேட்டார்.

சினிமா செய்திகள்
அதற்கு விஜய் கூறுகையில் நான் அப்போதெல்லாம் சினிமா செய்திகளை மட்டும் பார்த்துவிடுவேன். ஆனால் தற்போதுதான் நாட்டு நடப்புகளை படிக்கிறேன். சில விஷயங்களை படிக்கும் போது என்னை வெகுவாக பாதிக்கும். அப்போது அந்த சம்பவம் நடக்காதபடி இப்படி நடந்திருந்தால் நல்லாயிருக்குமேனு நினைப்பேன் என்றார்.

நெல்சன் சொன்ன உதாரணம்
அதற்கு நெல்சன் ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என கூற, அதற்கு விஜய், புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் என்னை பாதித்தது. அந்த சிறுவன் இறப்பால் அந்த பயிற்சி மையம் மூடப்பட்டது, சிறுவன் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைத்தது எல்லாமே வரவேற்கக் கூடிய ஒன்றுதான்.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம்
நான் கேள்விப்பட்டவரை இது போன்ற துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளங்கள் ஊருக்கு வெளியேதான் இருக்கும். அங்கிருந்து துப்பாக்கியால் சுட்டால் எத்தனை மீட்டர் தூரத்திற்கு செல்லும் என்பதையெல்லாம் கணக்கிட்டுதான் அமைப்பார்கள். அது போல் இந்த தளமும் ஊருக்கு வெளியே இருந்திருந்தால் அந்த சிறுவன் உயிரோடு இருந்திருப்பானே என நான் யோசிப்பேன்.
Recommended Video

கணினி சார்ந்த பயிற்சி
இன்னொன்று பயிற்சி என்பது வேண்டும்தான். ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் கணினி சார்ந்த பயிற்சிக்கான கட்டமைப்பை உருவாக்கலாம் என புதியதொரு ஐடியாவை கொடுத்தார் விஜய். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் நடந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் புகழேந்தி என்ற சிறுவன் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications