இருபுறமும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்.. நடுவில் தளபதி.. கண் கலங்கி தொண்டையில் துக்கத்துடன் விஜய்
சென்னை: இரு கைகளையும் இழந்த கிருஷ்ணகிரி மாணவன் அளித்த பரிசால் நெகிழ்ச்சி அடைந்த நடிகர் விஜய் கண்கலங்கினார்.
தமிழகத்தில் நடந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்த விஜய் முடிவு செய்திருந்தார். இதனால் அவர் 234 தொகுதிகளிலும் முதல் 3 மதிப்பெண்களை பிடித்த மாணவ, மாணவிகளையும் அவர்களது பெற்றோரையும் அழைத்து இன்று சந்திப்பு நடத்தி வருகிறார்.
விஜய் ஆர்கே கன்வென்ஷன் சென்டருக்கு ரசிகர்களின் கூட்டத்தில் திக்குமுக்காட வைத்தனர். அந்த வகையில் விஜய் விழா மேடைக்கு வந்ததும் அங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போடப்பட்ட இருக்கைகளுடன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அருகே கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செயல்பட்டு வரும் நெடுமருதி அரசு மேல் நிலை பள்ளி மாணவன் கீர்த்தி வர்மா அமர்ந்திருந்தார்.

அவருக்கு விஜய் கை கொடுத்தார். விஜய்க்கு கீர்த்தி வர்மா ஒரு புகைப்பட ஓவியத்தை கொடுத்தார். அப்போது விஜய் அதை பிரித்து பார்த்தார். அவருடைய புகைப்படம் வரையப்பட்டிருந்தது. இதனால் விஜய் நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் விஜயிடம் அந்த ஓவியம் குறித்து கீர்த்தி வர்மா ஏதோ கூற அதற்கு விஜய் நெகிழ்ந்து கட்டியணைத்தார்.
பின்னர் விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் கீர்த்தி வர்மா கண்கலங்கினார். அதை பார்த்து விஜய்யும் கண் கலங்கி சோகமாகவே இருந்தார். கீர்த்தி வர்மா மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்தார். தந்தையை இழந்தவர், தாய் கூலி வேலை செய்து வருகிறார். கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் 10ஆம் வகுப்பில் 437 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
விஜய்யின் வலது புறத்தில் மற்றொரு மாற்றுத்திறனாளி மாணவி ஒரு குழந்தை போல் படுத்திருந்தார். அவரிடமும் பேசினார். அவரது கைகளை சரியாக பிடித்து வைத்தார். இவர்களின் நிலைகளை கண்டு விஜய் மன வேதனையடைந்தார். பின்னர் சில மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இத்தனை நாட்கள் பட விழாக்களில் பேசி வந்த விஜய் தற்போது முதல் முறையாக இது போல் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசியிருக்கிறார். இதை அவரே கூறினார். மேலும் நம்மை கெடுக்கும் கூட்டம் நம்மை சுத்தி இருக்கும். அவர்களை நம்பாமல் மனசாட்சி என்ன சொல்லுகிறதோ அதை நம்புங்கள் என்றார்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications