விஜயகாந்த் நினைவு தினம் குறித்த கேள்வி.. செய்தியாளர்களை ஆடிப்போக வைத்த ரஜினிகாந்தின் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்திடம், கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ரஜினிகாந்த் சரியாக கேள்வியை கவனிக்காத சூழலில் திடீரென வாழ்த்துக்கள் என்று கூறினார். இதை கேட்டு ஆடிப்போன செய்தியாளர்கள், கேள்வியை மீண்டும் தெளிவாக புரியும்படி கேட்டார்கள். அப்போது சோகமான ரியாக்சனை பதிலாக தந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தேமுதிகவினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெற்றது.

rajinikanth vijayakanth premalatha

இதனிடையே விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்த நிலையில், பேரணிக்கு சென்னை காவல்துறை தரப்பில் அனுமதி தரப்படவில்லை.. எனினும் தடையை மீறி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் பேரணி நடந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கேப்டன் வாழ்க... அரசு ஒழிக... என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக சென்றார்கள். இன்று நாள் முழுவதும் பல ஆயிரம் ரசிகர்கள், பொதுமக்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அதிமுக தலைவர்கள், திமுக தலைவர்கள் உள்பட பல கட்சி தலைவர்களும் இன்று விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் கேப்டன் விஜயகாந்தினை நினைவுகூர்கிறேன்!" என்று கூறினார்.

நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், "அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்." என்று கூறியிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த பதிவில், "தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்." என்று கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த பதிவில், கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்,என் அன்புக்குரிய கேப்டனுக்கு நினைவஞ்சலி என தெரிவித்திருந்தார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்திடம், கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ரஜினிகாந்த் சரியாக கேள்வியை கவனிக்காத சூழலில் திடீரென வாழ்த்துக்கள் என்று கூறினார். இதை கேட்டு ஆடிப்போன செய்தியாளர்கள், கேள்வியை மீண்டும் தெளிவாக புரியும்படி கேட்டார்கள். அப்போது சோகமான ரியாக்சனை பதிலாக தந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்றும் சென்னை விமான நிலையத்தில் இதேபோன்று ரியாக்சனை ரஜினிகாந்த் கொடுத்தார். திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து அப்போது செய்தியார்கள் கேட்டபோது, ரஜினிகாந்த் "எப்போ நடந்தது?" என அதிர்ச்சியாகக் கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலை சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்தே செய்தியாளர்கள் கேட்ட போதும் ரஜினிக்கு தெரியாமல் இருந்தது. இதையடுத்து கடந்த மழையில் இந்த சம்பவம் நடந்ததாக செய்தியாளர்கள் அப்போது பதில் அளித்தனர்.அதற்கு ரஜினிகாந்த், " 'ஓ மை காட்' என வருத்தத்துடன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+