லிவ்-இன்-டு கெதர்.. காதலன் சித்ரவதை... கொல்லப்போவதாக மிரட்டுறாரு.. பேஸ்புக் லைவில் கதறிய நடிகை
சென்னை: என்னுடைய லிவ்-இன்-டு கெதர் காதலன் என்னை கொல்லப்போவதாகவும், என் மீது ஆசிட்ஊற்றபோவதாகவும் மிரட்டுகிறார் என்று பேரன்பு பட நடிகை அஞ்சலி அமீர் பேஸ்புக் லைவில் கதறியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் அஞ்சலி அமீர். இவர் தமிழில் பேரன்பு படத்தில் நடித்துள்ளார். இதேபோல் மலையாள பிக்பாஸிலும் கடந்த 2018ம் ஆண்டு பங்கேற்றார்.
இந்நிலையில் அஞ்சலி அமீர் அண்மையில் தனது பேஸ்புக் லைவில் கண்ணீருடன் பேசியுள்ளார். அதில் அவர் ஒருவருடன் லிவ்-இன்-டு கெதருடன் இருந்ததாகவும் அவர் தன்னை ஆசிட் ஊற்றி எரித்து கொல்லப்போவதாக மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கொல்லப்போவதாக
அந்த வீடியோவில் அஞ்சலி அமீர், தொடர்ந்து தன்னை லிவ்-இன்-டு கெதர் காதலன் டார்ச்சர் செய்து வந்ததாகவும், இதனால் அவருடன் உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்த உடன் அவர் என்னை கொன்று , ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

தற்கொலை முடிவு
தன்னுடைய சேமிப்பில் இருந்து சுமார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 4லட்சம் வரை அவர் பறித்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட டார்ச்சர்களை தாங்க முடியவில்லை என்றும்,தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு
அஞ்சலிக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, அவரது பெற்றோர் கூட இல்லை என்பதால், இந்த பிரச்சனையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் பலர் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பயோகிராபியில்
நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம். இதனிடையே தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை பேஸ்புக் லைவில் சொல்லவில்லை
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications