மோசம் போயிட்டேனே.. நம்பி ஏமாந்துட்டேனே, மிரட்டறாங்களே.. போலீசிடம் ஓடிய பிரபல நடிகை கவுதமி..என்னாச்சு
சென்னை: நம்ப வைத்து மோசம் செய்துவிட்டதாகவும், வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டு, 25 கோடி ஏமாற்றிவிட்டதாகவும்கூறி, போலீசுக்கு ஓடியுள்ளார் பிரபல நடிகை கவுதமி.
தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி.. அதற்கு பிறகு, பல்வேறு பிரபல கதாநாயகர்களுடன் பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி இடத்தை தக்கவைத்து கொண்டவர்..

இப்போதும் தொடர்ந்து சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருபவர். பாஜக உறுப்பினரும்கூட.. நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜகவுக்காக பிரச்சாரத்தையும் செய்தவர் கவுதமி.
இந்நிலையில், நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையரிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "125-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004-ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமாவில் 17 வயது முதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி.
எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் தொடர்பு கொண்டு எனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாகக் கூறினார்.
அழகப்பன்: நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
அதே வேளையில் எனது கையெழுத்தை மோசடியாக போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்.. அதனால், எனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான இடத்தை அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று கவுதமி கேட்டுக் கொண்டுள்ளார்.
தன்னுடைய சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் தன்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாடகமாடி சொத்துக்களின் பவர் ஏஜெண்டாக மாறியதோடு மட்டுமல்லாது அது தொடர்பான நடவடிக்கைக்காக பல்வேறு வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டதாக கவுதமி தெரிவித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
விசாரணை: அழகப்பன் தன்னை நம்ப வைத்து மோசடி செய்துள்ளதாகவும், 4 விதமான மோசடிகள் மூலமாகவும் தன்னுடைய வங்கிப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த மோசடியையெல்லாம் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் கவுதமி மேலும் தெரிவித்துள்ளார்.
சொத்துக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தன்னை மட்டுமல்லாது தன் மகளுக்கும், தனக்கு உதவி செய்யும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் கொடுப்பதாக குற்றம் சாட்டி புகாரில் கவுதமி தெரிவித்திருக்கிறார்.
பரபரப்பு: இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள், நடிகை கவுதமியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தையும் பெற்றனர்.. அடுத்தக்கட்டமாக குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications