அசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்
பீட்சா டெலிவரி செய்யும் நபர் மீது நடிகை புகார் செய்துள்ளார்
சென்னை: "என்னை கூப்பிடறாங்க.. அசிங்க அசிங்கமாக பேசறாங்க.. பாலியல் தொழிலுக்கு என்னை போன் செய்து அழைக்கிறார்கள்.." என்று நடிகை காயத்ரி சாய்நாத் போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசாரின் விசாரணையில், நடிகையின் பெயரை ஆபாச வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்த பீட்சா டெலிவரி நபர் பரமேஸ்வரனை போலீசார் அலேக்காக தூக்கி உள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் காயத்ரி சாய்நாத்... இவர் ஒரு நடிகை.. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். தெலுங்கிலும் நடித்து வருகிறார். மேலும் பேஷன் டிசைனராகவும் உள்ளார்.
இவர், தேனாம்பேட்டை மகளிர் போலீசில் ஒரு புகார் தந்தார்.. அதில் "எனக்கு நிறைய செல்போன் நம்பர்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன... எல்லாருமே ஆபாசமாக பேசுகிறார்கள்.. பாலியல் தொழிலுக்கு என்னை அழைக்கிறார்கள்.." என்று சொன்னதுடன், சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் ஆகிய 3 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களது நம்பர்களையும் புகாரில் சேர்த்து தெரிவித்திருந்தார்.

செல்போன் நம்பர்கள்
இதையடுத்து போலீசாரும் காயத்ரி சாய்நாத் குறிப்பிட்ட அந்த 3 பேருக்கும் சம்மனை அனுப்பி விசாரணையில் இறங்கினர். அவர்களது செல்போன் நம்பர்களை வைத்து ஆய்வு செய்ததில், ஆபாச வீடியோக்கள் தகவல்களை ஷேர் செய்ததும், ஆபாச வீடியோ வைத்திருந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் நடிகை காயத்ரி சாய்நாத் நம்பரை ஒருவர் பதிவிட்டு இருந்ததும் தெரியவந்தது.

பீட்சா
அதனால், அந்த ஆபாச வாட்ஸ்அப் குரூப்பில் காயத்ரி சாய்நாத்தின் நம்பரை ஷேர் செய்தவர் யார் என்று விசாரணையை போலீசார் முடுக்கினர்.. அப்போது டோமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன்தான் இந்த வேலையை செய்தது என கண்டுபிடித்தனர்.. உடனே பரமேஸ்வரனை பிடித்து விசாரணை செய்தபோதுதான் அனைத்து விஷயமும் வெளியே வந்தது.

பரமேஸ்வரன்
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பீட்சா ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார் காயத்ரி சாய்நாத்.. அந்த பீட்சாவை பரமேஸ்வரன் டெலிவரி செய்வதற்காக காயத்ரிக்கு அடிக்கடி செல்போனில் கூப்பிட்டு பேசியுள்ளார். பீட்சா டெலிவரி செய்யும்போது, பரமேஸ்வரனுக்கும், காயத்ரிக்கும் அட்ரஸ் சம்பந்தமாக தகராறு வந்துள்ளது.. இந்த ஆத்திரத்தில்தான காயத்ரியீன் நம்பரை, ஆபாச வாட்ஸ் அப் க்ரூப்பில் பழிவாங்குவதற்காகவே பரமேஸ்வரன் போட்டுள்ளது தெரியவந்தது.

பரபரப்பு
இப்போது விசாரணை நடக்கிறது.. இதனிடையே டோமினோஸ் பீட்சா நிறுவனத்தினர் பரமேஸ்வரனை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார். நடிகையின் பெயரை ஆபாச வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்ட இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை தந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications