தெலுங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட கஸ்தூரி.. பொதுவான கருத்து அல்ல என்று விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன, நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள், தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை, கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்ப பெறுகிறேன் என்று நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் இந்துமக்கள் கட்சி நடத்திய பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, "300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையானது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

actress kasthuri telugu brahmin

இந்நிலையில் தாம் பேசிய கருத்து ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே நானும் சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள். தெலுங்கு மக்களை நான் எதுவுமே கூறவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் அப்படி குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?

நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.

இதனிடையே சர்ச்சைகள் அதிகமான நிலையில், நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்தன. எனக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வந்துள்ளன. அவர்கள் எனது பேச்சை கடினமாக்கிவிட்டார்கள். எனினும், இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்களுக்கும் நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் தாக்கங்களை பொறுமையாக கூறி விளக்கினார்.

நான் எப்போதுமே என் பாரத மாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். எனக்கு தெலுங்குடன் எப்போது சிறப்பு தொடர்பு உள்ளது என்பது அதிர்ஷ்டமாகும். நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜகிருதிகள் பாடி புகழ் பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள் நாள். தெலுங்கில் எனது திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை வழங்கியுள்ளார்கள்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களுக்குச் சூழல்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன். என்னுடைய தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது இல்லை. கவனக்குறைவாக பேசிய வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். அனைவரின் நலன் கருதி, நவம்வர் 3ம் தேதி அன்று நான் பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது அனைத்து பேச்சுக்களையும் திரும்பப் பெறுகிறேன் .

அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. . தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்" இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+