நடிகை கஸ்தூரி "அதை" சொன்னதுமே.. அவசர அவசரமாக கிளம்பி வந்த திமுகவினர்.. "முதல்ல கைய எடுங்க".. என்னாச்சு
சென்னை: தேசிய அளவில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது உதயநிதியின் சனாதன பேச்சு.. தாமரை கட்சியினரை இந்த பேச்சு டென்ஷனாக்கி உள்ள நிலையில், நடிகை கஸ்தூரியும் உதயநிதியை சீண்டிஉள்ளது, பரபரப்பை கூட்டிவருகிறது.
ஒற்றை செங்கல்லை உதயநிதி கையில் எடுத்தபோதே, தேசிய கவனத்தை பெற துவங்கிவிட்டார்.. கடந்த எம்பி தேர்தலின்போது, பிரச்சாரம் செய்ய வந்தபோதே, எடப்பாடி பழனிசாமியின் மொத்த கவனமும், உதயநிதி மீதே குவிந்தது..

சட்டசபை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா , பாஜக தலைவர் நட்டாவரை அனைவருமே உதிர்த்து விமர்சித்த பெயர் உதயநிதி ஸ்டாலின்தான். இப்போது, சனாதனத்தை தொட்டுள்ளார் உதயநிதி.. உதயநிதியின் சனாதன பேச்சுக்கள், பாஜகவை கொதிப்பில் ஆழ்த்தி வருகிறது..
சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.. எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று உதயநிதி பேசியிருப்பது தலைநகரை அசைத்து பார்க்க வைத்து வருகிறது.
மத்திய அமைச்சர்: அதனால்தான், மத்திய அமைச்சர் அமித்ஷாவே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.. மற்றொருபக்கம் உதயநிதி மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. போலீஸ்வரை புகார் சென்றாலும், உதயநிதி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. இந்த உறுதிப்பாட்டை, மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவிட்டும் இருக்கிறார்.
கஸ்தூரி: இந்நிலையில், சமூக செயற்பாட்டாளரும், பிரபல நடிகையும், துணிச்சல் பெண்மணியுமான கஸ்தூரி, இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.. கஸ்தூரியை பொறுத்தவரை, திமுக, அதிமுக, விசிக என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தவறு என்று தெரிந்தால், அதை துணிச்சலுடன் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர் கஸ்தூரி..
யாருக்காகவும், எதற்காகவும் பயந்தவர் கிடையாது.. டாஸ்மாக் முதல் சட்டம் ஒழுங்கு சீர்கேடுவரை திமுக அரசின் பல்வேறு விவகாரம் கேள்விகளை எழுப்பியவர்.. இதோ இப்போது, உதயநிதிக்கும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே...அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
— Kasturi (@KasthuriShankar) September 3, 2023
ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி.
அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க !
கையை எடுங்க: இது தொடர்பாக, "டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே? அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?.. ஊருக்கு உபதேசம் அதுவே பரம்பரை யுக்தி.. சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ?.. முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க" என்று பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவுக்கு வழக்கம்போல் ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி பதிவாகி உள்ளது..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications