இனி மாண்புமிகு.மீனா? மத்திய அமைச்சர் ஆகப் போறாராமே? டெல்லியில் ’டாப்’ தலையுடன் சந்திப்பு.. பரபர மூவ்
சென்னை: பிரபல நடிகையான மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜகவில் இணைய போவதாக வதந்திகள் உலா வந்தன. இதற்கிடையே துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனா விரைவில் மத்திய இணையமைச்சர் ஆக்கப்படலாம் என தகவல் உலாவும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் வெற்றி கொடி நாட்டி வருபவர் நடிகை மீனா. தமிழ் திரையுலகில் 45 ஆண்டுகளை கடந்து பயணித்து வருகிறார். அவரது தாய் சித்தி என குடும்பமே கலைக் குடும்பம் தான். அவரது மகள் கூட விஜய்க்கு மகளாக தெறி படத்தில் நடித்திருந்தார்.
பேபி மீனாவாக நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், எஜமான் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்தார். அதற்குப் பிறகு ராஜ்கிரண் உடன் என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக நடித்த அவர், முதன் முதலில் எஜமான் படத்தில் தான் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்தார்.

முன்னதாக மீனா நடிப்பில் தெலுங்கில் ராஜேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்த 'நவயுகம்'.படம் 1990 இல் வெளியானது. அதன் பிறகு அவர் தமிழில் 'ஒரு புதிய கதை' படத்தில் புதுமுகம் பிரபுராஜ் ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு தான் எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து முத்து படத்திலும் இந்த ஜோடி நடித்த நிலையில் அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது. ரஜினி மட்டுமல்லாது கமல், அஜித் என முன்னணி நாயகர்களோடு நடித்தவர், தெலுங்கு, கன்னடம் என மிகவும் பிசியாக இருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்தபோது வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். 2009 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு நைனிகா என்ற குழந்தை உள்ளது. இவர்தான் விஜயுடன் தெறி படத்தில் நடித்தவர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வித்தியாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அதில் உடைந்து போன மீனா மீண்டு வருவதற்கு சில வருடங்கள் பிடித்தது.
தொடர்ந்து மகளுக்காக வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதற்கு இடையே டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஒருவரின் இல்லத்துக்கு மீனா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கலா மாஸ்டர் தான் அவரை அழைத்துச் சென்றார் என கூறப்பட்ட நிலையில் திடீரென மீனாவுக்கு அரசியல் ஆசை வந்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து பாஜகவில் அவர் இணைய போவதாகவும் தகவல்கள் உலாவின. ஆனால் அது போன்ற தகவல்களை மீனா மறுத்து வந்தார்.
இந்த நிலையில் தான் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார் மீனா. குறிப்பாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவர் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பாஜக மூத்த தலைவர்கள் சிலரை அவர் சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பிரபலமான நடிகர் நடிகைகளை பாஜக கட்சிக்குள் இழுத்து வருகிறது. அந்த வகையில் தான் குஷ்பூ, சரத்குமார் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு அவர்களுக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது .இந்த நிலையில் மீனாவும் மத்திய இணை அமைச்சர் ஆக்கப்படலாம் என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள். அதை ஒட்டியே மீனா டெல்லிக்கு சென்றதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்பும் வரலாம் என்கின்றனர். ஆனால் மீனா தரப்பில் இது தொடர்பாக எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications