மாமல்லபுரம் அருகே விபத்து நடந்தது எப்படி?.. போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த யாஷிகா ஆனந்த்!
சென்னை: நைட் பார்ட்டிக்கு பின் நடந்தது என்ன என்பது குறித்து சுயநினைவு திரும்பியதும் நடிகை யாஷிகா பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலாக வலம் வருகிறார். துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

போட்டியாளர்
கடந்த 2018-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் கைவசம் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார்.

தோழி
காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

கார் பள்ளம்
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்தது. யாஷிகாவின் கூக்குரல் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச் செட்டி பவானி உயிரிழந்துவிட்டார்.

மாமல்லபுரம் போலீஸார்
யாஷிகாவுக்கு இடுப்பு, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவருக்கு சுயநினைவு வந்தவுடன் மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதிவேகமாக ஓட்டிய கார்
அப்போது அவர் விபத்து நடந்த நேரத்தில் நான் குடித்திருக்கவில்லை. காரை அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரின் முன் இருக்கையில் என்னுடன் அமர்ந்திருந்த பவானி சீட் பெல்ட் அணியவில்லை. இதனால் விபத்து நடந்த போது அவர் தூக்கி வீசப்பட்டார் என யாஷிகா தெரிவித்துள்ளாராம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications