இஸ்ரேல் ஈரான் மோதலால் அதானிக்கு வந்த சோதனை.. எதிர்பார்க்காத சிக்கல்.. என்ன நடக்க போகுதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக அதானி போர்ட்ஸ் பங்குகள் இன்ட்ராடே வர்த்தகத்தில் 5.3% சரிந்து உள்ளது. எதிர்பார்க்காத அளவில் BSE இல் மட்டும் அதானி போர்ட்ஸ் பங்குகள் ரூ.1,337.30 ஆக குறைந்து உள்ளது.

ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலின் மிகப்பெரிய துறைமுகத்தை அதானி போர்ட்ஸ் நிறுவனம்தான் இயக்கி வருகிறது. 70% பங்குகளுடன் அதானி போர்ட்ஸ் இந்த துறைமுகத்தை அதானி குழுமம் இயக்கி வருகிறது.

israel iran israel palestine war international

ஈரான்-இஸ்ரேல் பதற்றம் அதிகரித்து வருவதால் அதானி போர்ட்ஸ் பங்குகள் 5% சரிந்து உள்ளன. அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் பங்குகள் இன்ட்ராடே டிரேடிங்கில் 5.3% சரிந்து ஒரு நாளின் குறைந்தபட்சமாக ரூ.1,337.30க்கு பிஎஸ்இக்கு சென்றது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக அதானி பங்குகள் சரிந்து வருகிறது.

ஹைஃபாவில் இஸ்ரேலின் மிகப்பெரிய துறைமுகத்தை இயக்கும் அதானி துறைமுக நிறுவனம்தான் இயக்கி வருகிறது. இஸ்ரேலில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் அதானி துறைமுகம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதானி குழுமம் ஹைஃபா துறைமுகத்தில் 70% பங்குகளை வைத்துள்ளது. இந்த துறைமுகம் தாக்கப்படவில்லை. அதே சமயம் வரும் நாட்களில் தாக்கப்பட்டாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை.

இது போக.. அங்கே போர் முற்றும் பட்சத்தில்.. அங்கே கடல்வழி பயணம் பாதிக்கப்படும். முக்கியமாக சரக்கு போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து பங்குதாரர்கள் வெளியே செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவே அதானி குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கி உள்ளது.

மோதல்: ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக் மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது. சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக் மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது.

ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போர் ஒரு பக்கம் தீவிரமாக நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கிவிட்டது. இரண்டு போருமே கண்டிப்பாக நீண்ட கால போராக இருக்கும்.. நீண்ட கால போராக பின்விளைவுகள் இந்த போரின் மூலம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் காரணமாக நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+