தென் மாவட்டங்களுக்கு போறீங்களா.. 4 ரயில்களில் டிக்கெட் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே ஸ்வீட் அப்டேட்
சென்னை: சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருமார்க்கத்திலும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் மதுரை - திருவனந்தபுரம் ரயிலிலும் ஒரு பெட்டி கூடுதலாக இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களும் படையெடுத்து வருகிறார்கள். இதனால் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

குடும்பத்துடன் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்களே மிகுந்த வசதியாக இருக்கும் என்பதால் பயணிகள் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகிறார்கள். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையில் பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் கூடுதல் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருமார்க்கத்திலும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை 17 ஆம் தேதி முதல் வரும் 23 ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோன்று, மதுரையில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இரு மார்க்கத்திலும் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது இன்று 16 ஆம் தேதி முதல் வரும் 21 ஆம் தேதி வரை மதுரை - திருவனந்தரபும் மற்றும் திருவந்தனபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நேரத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications