ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வழக்கு.. சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை
சென்னை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்த சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. மரியா கிளேட் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், 2025 ஜூன் மாதம் பேராசிரியர் நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரில், காவல் விசாரணையில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த மரணம் சித்திரவதை மரண வழக்காக விசாரிக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின்குற்றப்பத்திரிகையில் நகைத் திருட்டு புகாரே போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கல் யூடியூப்களில் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சவுக்கு சங்கர் தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தாக்கல் செய்திருந்த மனுவில், சவுக்கு சங்கர். சரிபார்க்கப்படாத வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்தவும், பொதுமக்களிடையே சந்தேகத்தையும் பகைமையையும் உருவாக்கவும் சவுக்கு சங்கர் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை கூறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது மனுவில், "யூடியூபர் சவுக்கு சங்கர் நீண்டகாலமாகத் தன்னைத் திட்டமிட்டுப் பொய்க் குற்றச்சாட்டுகளால் இலக்கு வைத்து வருவதாகக் கூறினார் 2022 ஜூலையில் போலி பாஸ்போர்ட் மோசடி புகாரில் தன்னை இணைத்துச் சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதாகவும், தன்னை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததாகவும் ஏடிஜிபி தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றம் தனக்கு 'கிளீன் சிட்' (குற்றமற்றவர் என்ற சான்றிதழ்) வழங்கிய பின்னரே அந்த அவதூறுகள் குறைந்தன .
அந்தப் பிரச்சாரத்தால் தனது புகழுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் சரிசெய்யப்படாவிட்டாலும், "நான் பொதுவெளியில் பதிலளிக்காமல், ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் எனது அரசுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தேன். எனினும் சமீபத்தில் சிவகங்கையில் கோயில் பாதுகாப்பு ஊழியர் காவலில் மரணமடைந்த பிறகு, யுடியூபர் மீண்டும் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராகப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த. அந்த மரணத்துடன் தன்னைத் தொடர்புபடுத்தி முற்றிலும் பொய்யான ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்தக் கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை, சரிபார்க்கப்படாதவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி உருவாக்கப்பட்டவை. ஆனால், அவை ஏதோ அதிகாரப்பூர்வமான தகவல் போலவும், தனக்குத் துறைக்குள் ரகசியத் தகவல்கள் கிடைப்பது போன்ற தோற்றத்திலும் முன்வைக்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் இவை உண்மையான ஆதாரங்கள் என்று நம்பும்படி அவர் ஏமாற்றுகிறார்.
உண்மை என்னவென்றால், அத்தகைய உத்தரவுகள் குறித்து முதல் சவுக்கு சங்கருக்கு எந்த நேரடி அறிவும் இல்லை, அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளைப் பார்க்கும் வசதியும் இல்லை. இத்தகைய பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைக் கூற அவரிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது. மக்களிடையே திட்டமிட்டு சந்தேகத்தை விதைப்பதே யுடியூபர் சவுக்கு சங்கரின் நோக்கம், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் சதித்திட்டங்கள் நிறைந்த மொழியைப் பயன்படுத்தித் தனது பெயரை அவர் கெடுக்கிறார்.
இந்தத் தவறான குற்றச்சாட்டுகள் மற்ற சமூக வலைதளப் பிரபலங்களாலும் பரப்பப்பட்டு, ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அது உண்மை போன்ற பிம்பத்தை டிஜிட்டல் தளங்களில் உருவாக்குகிறார்" என்று கூறியிருந்தார். அத்துடன் சவுக்கு சங்கருக்கு மட்டுமின்றி,
டிஜிட்டல் தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் சேர்த்துத் தடை விதிக்க வேண்டும் என்று ஏடிஜிபி கோரியிருந்தார்.
இந்த வழக்கில் ஏடிஜிபி தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன் வாதிடும் போது, உயர் பதவியில் இருக்கும் தனது கட்சிக்காரரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்டம் 19(2)-ன் கீழ் ஒரு குடிமகன் அவதூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுவதாகவும் வாதிட்டார். இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து யூடியூபர் சவுக்கு சங்கர், டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிராக, அஜித்குமார் மரணம் தொடர்பாக அவதூறான குற்றச்சாட்டுகளையோ அல்லது உள்நோக்கம் கற்பிக்கும் கருத்துகளையோ தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்த சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. மரியா கிளேட் உத்தரவிட்டுள்ளார்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்














Click it and Unblock the Notifications